நான் அரசியல் ஆதாயத்திற்காகத்தான் பேசுகிறேன்-திருமாவளவன்
சென்னை : திருமாவளவன் வாழ்விலும், தாழ்விலும் இஸ்லாமியர்களோடு இருப்பான். அரசியல் ஆதாயத்திற்காக பேசுகிறேன் என்று நீங்கள் நினைக்கலாம். நான் அரசியல் ஆதாயத்திற்காகத்தான் பேசுகிறேன் என்று கூறியுள்ளார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணை அமைப்பான இஸ்லாமிய ஜனநாயக பேரவை சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி எழும்பூரில் நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சிக்காக 3 நாள் நோன்பு இருந்தார் திருமாவளவன். பின்னர் நேற்று விருந்தில் கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி 5 ஆண்டுகளாக இப்தார் விருந்தை கொடுத்து வருகிறது. தலித்துகளுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே ஒரு நிரந்தர, நிலையான கூட்டணி எல்லா நிலையிலும் சமூக நிலையை உருவாக்குகின்ற வகையில் ஏற்பட வேண்டும்.
அந்த முயற்சி மேற்கொண்டு வருகிறேன். இஸ்லாமியர்களும், தலித்துக்களும் இணைந்து சமூக கூட்டணி உருவாக்க வேண்டும். அது ஒரு அரசியலில் மாற்றத்தை ஒரு கூட்டணியை உருவாக்குகின்ற எண்ணத்தில் திட்டமிட்டு செயல்படத் தொடங்கி இருக்கிறது.
திருமாவளவன் வாழ்விலும், தாழ்விலும் உங்களோடு இருப்பான் அரசியல் ஆதாயத்திற்காக இங்கு பேசுகிறேன் என்று நீங்கள் நினைக்கலாம். நான் அரசியல் ஆதாயத்திற்காகத்தான் பேசுகிறேன்.
எனக்காக மட்டுமல்ல உங்களுக்காக, நமக்காக, எல்லோரையும் எவ்வளவு காலம் தோளில் சுமக்கிறோம். இவ்வளவு காலம் உழைத்தது போது இனி நமக்கு அதிகாரம் வேண்டும்.
2016- சட்டசபை தேர்தலில் தலித்- முஸ்லிம் கூட்டணி உருவாகும். முஸ்லிம்கள் பல குழுக்களாக இருந்தாலும் ஒன்றாக இருக்க வேண்டும் இஸ்லாமிய மதம் கட்டுப்பாடுள்ள மதம். இதை வேறு எந்த மதத்திலும் பார்க்க முடியாது. நபிகள் நாயகம் போல் பல தலைவர்கள் தேவை. தலைமை பண்பு கொண்டவர்கள் தேவை என்றார் திருமாவளவன்.
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல்












Click it and Unblock the Notifications