25 ஆண்டுகளாக தேர்ச்சியில் முதலிடம் வகிக்கும் காமராஜர் பிறந்த விருதுநகர்-அன்பழகன் பெருமை
நெல்லை: கடந்த 23 ஆண்டுகளாக பத்தாவது, பிளஸ்டூ தேர்வில் தேர்ச்சி விகிதத்தில் விருதுநகர் மாவட்டம் முதலிடம் பிடித்து வருவது பாராட்டுக்குரியது என்று தமிழக நிதியமைச்சர் அன்பழகன் பாராட்டியுள்ளார்.
பள்ளிக் கல்வித்துறை சார்பில் பாளையங்கோட்டை சாராள்தக்கர் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் தின விழா நடந்தது. இதில் தமிழக நிதியமைச்சர் க. அன்பழகன் கலந்து கொண்டு நல்லாசிரியர்கள் மற்றும் 10-ம், 12-ம் வகுப்புகளில் அதிக மதிப்பெண் எடுத்தவர்களுக்கு பரிசு வழங்கினார்.
அப்போது அவர் பேசியதாவது,
ஒரு ஆசிரியரால் எந்த அளவுக்கு உயர முடியும் என்பதற்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் முன் உதாரணமாக விளங்கினார். எனவே ஆசிரியர்கள் மேலும், மேலும் உயர்வதற்கு தங்கள் தகுதிகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். தமிழ் நாட்டில் ஆசிரியர்களின் குறைகளை போக்கும் நிறைவான ஆட்சி நடக்கிறது.
சிறந்த அறிஞர்களை, மேதைகளை உருவாக்கத் தொண்டாற்றும் ஆசிரியர்கள் முழு ஈடுபாட்டோடு பணியாற்ற வேண்டும் என்பதற்காகத் தான் அவர்களின் குறைகளை முதல்வர் கருணாநிதி நிவர்த்தி செய்து வருகிறார்.
கடந்த 25 ஆண்டுகளாக விருதுநகர் மாவட்டம் மாணவர்கள் தேர்ச்சியில் முதலிடத்தில் உள்ளனர். காமராஜர் பிறந்த மாவட்டம் என்பதால் இச்சிறப்பு கிடைத்துள்ளது. ஆனால் தமிழகத்திலேயே அதிகம் படித்தவர்கள் உள்ள மாவட்டம் திருநெல்வேலி தான்.
பல்வேறு தமிழறிஞர்கள் இந்த மண்ணில் உருவாகியிருக்கிறார்கள். மாணவர்களிடம் ஆசிரியர்கள் கோபப்படாமல் பொறுமையோடு கற்பிக்க வேண்டும் என்றார் அன்பழகன்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications