தமிழகத்திலும் மேற்கு வங்கத்திலும் மீண்டும் எழுச்சி பெறும் காங்கிரஸ்: ராகுல் காந்தி

கொல்கத்தாவில் நடந்த காங்கிரஸ் பொதுக் கூட்டத்தில் பேசிய அவர்,
தொடர்ந்து கம்யூனிஸ்டு ஆட்சியின் கீழ் இருந்து வரும் மேற்கு வங்க மாநிலத்தின் பரிதாப நிலையை காங்கிரஸ் நன்றாக உணர்ந்துள்லது. இதனால் மாநிலத்துக்கு எண்ணற்றத் திட்டங்களை மத்திய அரசு அறிவித்து அதற்காக கணிசமான நிதியையும் ஒதுக்கியது.
ஆனால், மத்திய அரசு வழங்கும் வளர்ச்சி நிதியை மேற்கு வங்க மாநில அரசு வீணாக்கிக் கொண்டிருக்கிறது. மக்களின் வளர்ச்சிக்காக மத்திய அரசு அளித்த நிதியின் பெரும்பகுதி சுரண்டப்பட்டுள்ளது.
பழங்குடியின மக்கள், வறுமைக் கோட்டிற்கு கீழே வாழும் மக்களுக்காக மார்ச்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எந்த ஒரு உருப்படியான திட்டம் எதையும் நிறைவேற்றவில்லை.
மேற்கு வங்கத்தில் இரு பிரிவினர் உள்ளனர். ஒன்று எல்லா வசதிகளையும் பெற்று செல்வச் செழிப்புடன் வாழும் கம்யூனிஸ்டு கட்சியினர். மற்றொன்று எந்த ஒரு வசதி வாய்ப்பும் இல்லாமல் மிகவும் பின்தங்கியிருக்கும் மற்றவர்கள்.
ரஷ்யாவில் கம்யூனிசம் முடிவுக்கு வந்ததாக ஒரு நாள் செய்திதாளில் நான் படித்தேன். அதே நிலை மேற்கு வங்கத்திலும் ஏற்படும். மார்க்சிஸ்ட் அரசு தூக்கி எறியப்படும் நாள் வெகு தூரத்தில் இல்லை.
கம்யூனிஸ கொள்கைகளை தீவிரமாகக் கடைப்பிடித்த உலக நாடுகள் எல்லாம் மக்களின் நலனை கருத்தில் கொண்டு காலத்துக்கு ஏற்ப மாறியுள்ளன. கம்யூனிஸ நாடான சீனாவே வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.
ஆனால் மேற்கு வங்கத்தை நீண்டகாலமாக ஆட்சி செய்து வரும் கம்யூனிஸ்டு கட்சியினர் கம்யூனிஸ சித்தாந்தத்தில் ஊறிப் போயுள்ளனர். வளர்ச்சிக்கு அவர்கள் பெரும் தடைக்கல்லாக உள்ளனர். நான் சீனா சென்றிருந்த போது அந்நாட்டு மூத்த கம்யூனிஸ்டு தலைவர்களை சந்தித்தேன். அவர்கள்கூட மேற்கு வங்க கம்யூனிஸ்ட்டுகள் ஏன் இப்படி இருக்கிறார்கள் என்று ஆதங்கத்துடன் கேட்டனர்.
உத்தரப் பிரதேசத்தில் காங்கிரசுக்கு புத்துயிரூட்ட நான் முயற்சித்த போது என்னை பலரும் கேலி செய்தார்கள். அங்கு காங்கிரஸ் புத்துயிர் பெறுவது நடக்காத காரியம் என்றார்கள். அதை நான் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. அதையெல்லாம் அலட்சியப்படுத்திவிட்டு கட்சிக்கு புத்துயிரூட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டேன். இப்போது உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ் எழுச்சியடைந்துள்ளது.
அதே போல தமிழகத்திலும் மேற்கு வங்கத்திலும் காங்கிரஸ் மீண்டும் எழுச்சி பெறும்.
எனது இந்த கருத்தைக் கேட்டு சிலர் சிரிக்கலாம். ஏளனம்கூட செய்யலாம். இதைப் பற்றியெல்லாம் தொண்டர்கள் கவலைப்படக் கூடாது.
தமிழ்நாட்டில் 35,000 ஆக இருந்த இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர்களின் எண்ணிக்கை தற்போது, 14.5 லட்சமாக அதிகரித்துள்ளது.
அதே போல மேற்கு வங்கத்திலும் காங்கிரஸ் கட்சியில் இணைந்து மாநிலத்தை கம்யூனிஸ்ட்களின் கையிலிருந்து விடுவிக்க இளைஞர்கள் முன்வர வேண்டும் என்றார் ராகுல்.
பின்னர் பேசிய மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, ராகுல் புதிய தலைமுறையின் தலைவர். நாங்கள் அவருக்குஉறுதுணையாக இருப்போம். உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம், பிகார், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் தான் இந்தியாவின் 40 சதவீத நாடாளுமன்றத் தொகுதிகள் உள்ளன. எனவே அந்த மாநிலங்களில் நாங்கள் கட்சியை பலப்படுத்துவோம் என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications