ஸ்பெக்ட்ரம் ஊழலில் தொடர்புடையவருக்கு ஊழல் கண்காணிப்பு ஆணையர் பதவியா?: பாஜக

இவர் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் தொடர்புடையவர் என்று கூறி அவரது பதவியேற்பு விழாவை பாஜக புறக்கணித்தது.
மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையராக இருந்த பிரதியுஷ் ஷாவின் பதவிக் காலம் நேற்று முன்தினம் முடிவடைந்தது. இதையடுத்து புதிய ஆணையரை நியமிப்பது தொடர்பான தேர்வு கமிட்டி கூட்டம் சில நாட்களுக்கு முன் நடந்தது.
அந்தக் கமிட்டியில் பிரதமர் மன்மோகன் சிங், உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.
இந்தப் பதவிக்கு மத்திய தொலைத் தொடர்புத்துறைச் செயலாளர் பி.ஜே.தாமஸ் பெயர் பரிசீலிக்கப்பட்டது. ஆனால், அதற்கு சுஷ்மா கடும் எதிர்ப்புத் தெரிவித்தார்.
ஸ்பெக்ட்ரம் 2ஜி அலைவரிசை முறைகேட்டில் தாமசுக்கும் தொடர்பு இருப்பதாகவும், அதை மூடி மறைக்கவே, அவரையே மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையராக நியமிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக சுஷ்மா குற்றம் சாட்டினார்.
மேலும் தேர்வுக் கமிட்டி கூட்டத்திலேயே, பி.ஜே.தாமஸ் நியமனத்துக்கு எதிரான தனது குறிப்பையும் சுஷ்மா சுவராஜ் எழுதினார்.
ஆனாலும் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் ப.சிதம்பரம் ஆகியோர் பி.ஜே.தாமஸையே தேர்வு செய்தனர். இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு நேற்று வெளியானது.
இந்த அறிவிப்பு வெளியான உடனேயே, மத்திய ஊழல் கண்காணிப்பு துறையின் புதிய ஆணையராக நேற்று மாலையே பி.ஜே.தாமஸ் பதவியேற்றுக் கொண்டார். ஜனாதிபதி மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில், அவருக்கு குடியரசுத் தலைவர் பிரதீபா பட்டீல் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் மன்மோகன் சிங், துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி, ப.சிதம்பரம், மத்திய சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி, தலைமைத் தகவல் ஆணையர் வஜாஹத் ஹபிபுல்லா, மத்திய கேபினட் செயலாளர் கே.எம்.சந்திரசேகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஆனால், இந்த பதவியேற்பு நிகழ்ச்சியை பாஜக புறக்கணித்து விட்டது.
இந்த விழா முடிந்தவுடன் சுஷ்மா சுவராஜ் நேற்றிரவு ஜனாதிபதி பிரதீபா பட்டீலை நேரில் சந்தித்து தாமசுன் நியமனத்துக்கு தனது எதிர்ப்பைத் தெரிவித்தார்.
மத்திய தகவல் தொடர்புத்துறைச் செயலாளராக இருந்து வந்த பி.ஜே.தாமஸ், கேரள மாநிலத்தைச் சேர்ந்த 1973ம் ஆண்டு பேட்ஜ் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆவார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications