மின்வேலி அமைத்து வனவிலங்குகளைக் கொன்று வாய்க்காலில் வீசிய 3 பேருக்கு ரூ.75 ஆயிரம் அபராதம்
வி.கே.புரம்: மணிமுத்தாறு அருகே மின்வேலி அமைத்து மிளா மற்றும் கான்று பன்றிகளைக் கொன்று உடலை வாய்க்காலில் வீசிய 3 பேருக்கு வனத்துறை ரூ.75 ஆயிரம் அபராதம் விதித்துள்ளது.
மணிமுத்தாறு அருகே பாபநாசம் வனச்சரகத்திற்கு உட்பட்ட வேம்மையாபுரம் தனியார் தோட்டத்தில் மின்வேலி அமைத்து 4 மிளா மற்றும் 4 காட்டுப் பன்றிகளைக் கொன்று அதன் உடலை அருகே உள்ள கால்வாயில் மர்ம நபர்கள் வீசினர்.
இது தொடர்பாக முண்டத்துறை புலிகள் காப்பக இணை இயக்குனர் வெங்கடேஷ் தலைமையில் வனச்சரகர் கிதிரோலி மற்றும் வன அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் சிவந்திபுரத்தைச் சேர்ந்த நாரயணன், பரமசிவன், அருணாச்சலம் ஆகிய 3 பேரும் தான் மின்வேலி அமைத்து அதில் சிக்கும் வனவிலங்குகள் உடலை கால்வாயில் வீசி வந்தது தெரிய வந்தது.
இதையடுத்து வன அதிகாரிகள் அருணாச்சலத்தை கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையே நாராயணன் மற்றும் பரமசிவத்தை வன அதிகாரிகள் கைது செய்து மூவருக்கும் தலா ரூ.25 ஆயிரம் என மொத்தம் ரூ.75 ஆயிரம் அபராதம் விதித்தனர்.












Click it and Unblock the Notifications