அண்ணா பிறந்த நாளன்று கைதிகள் விடுதலை-சாமி கோரிக்கை நிராகரிப்பு
சென்னை: அண்ணா பிறந்த நாளையொட்டி கடந்த 2008ம் ஆண்டு கைதிகள் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து ஜனதாக் கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சாமி தொடர்ந்திருந்த வழக்கில், அவரது கோரிக்கையை சென்னை உயர்நீதிம்ன்றம் நிராகரித்தது.
இதுதொடர்பாக சுப்பிரமணியசாமி கடந்த 2008ம் ஆண்டு தொடர்ந்த வழக்கில் கூறியிருந்ததாவது:
2008ம் ஆண்டு செப்டம்பர் 15 ந்தேதி அண்ணா பிறந்தநாளன்று தமிழக அரசு 1,405 தண்டனை கைதிகளை நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்தது. இது சட்டத்திற்கு எதிரானதாகும். அரசியல் ரீதியாக முக்கிய கொலை வழக்குகளில் தண்டனை பெற்றவர்கள் எல்லாம் இதில் விடுதலை பெற்று விட்டனர்.
எனவே விடுவிக்கப்பட்ட அனைவரையும் மீண்டும் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். இது தொடர்பாக விதிமுறைகளை வகுக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் இப்ராகிம் கலிபுல்லா, சுந்தரேஷ் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது சாமி நேரடியாக ஆஜராகி வாதாடினார். அவர் கூறுகையில், அண்ணா பிறந்தநாளான 15ந் தேதி சுமார் 2 ஆயிரம் கைதிகளை தமிழக அரசு விடுதலை செய்ய உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. என்னுடைய வழக்கில் கோர்ட்டு தீர்ப்பு கூறும் வரை கைதிகள் விடுதலை தொடர்பாக தமிழக அரசுக்கு கைதிகளை விடுவிக்கக்கூடாது என்று உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றார்.
இதற்கு விடுதலையானவர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் எம். ராதாகிருஷ்ணன் எதிர்ப்பு தெரிவித்தார். 1,405 பேரையும் பிரதிவாதிகளாக சேர்த்துதான் வழக்கை விசாரிக்கவேண்டும் என்றார்.
இரு தரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதிகள், 2008ம் ஆண்டு விடுதலை தொடர்பான வழக்கில் தற்போதைய அரசின் முடிவுகளுக்கு நாங்கள் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என்று கூறி சாமியின் கோரிக்கையை தள்ளுபடி செய்தனர். பின்னர் வழக்கு நவம்பர் 8ந் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications