பார்வதி அம்மாளைப் பார்த்து காலில் விழுந்து வணங்கும் சிங்களர்கள்!
கொழும்பு: விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதியம்மாளின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவரை மருத்துவமனைக்கு வந்து பார்த்து சிங்களர்கள் காலில் விழுந்து வணங்கிச் செல்வதாக செய்திகள் கூறுகின்றன.
இலங்கை வல்வெட்டித்துறை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பார்வதியம்மாள், தற்போது நீராகாரம் மற்றும் திட ஆகாரம் உட்கொள்வதாக அவரது உறவினரும் எம்.பி.,யுமான சிவாஜிலிங்கம் கூறியுள்ளார்.
இந்நிலையில், வடமராட்சி பகுதிக்கு சுற்றுலா வருபவர்களில் ஏராளமானோர் பார்வதியம்மாளை பார்க்க வருவதாக இலங்கை தமிழ் இணையதளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சில தினங்களுக்கு முன்பு கூட, வட இலங்கைக்குக்கு சுற்றுலா வந்த 100 சிங்களவர்கள், வல்வெட்டித் துறை மருத்துவமனைக்கு வந்துள்ளனர். பிரபாகரனின் தாயாரைப் பார்க்க விரும்புவதாகக் கூறிய அவர்களுக்கு மருத்துவமனை நிர்வாகம் அனுமதியளித்தது. அந்த சிங்களவர்களில் பலர் பார்வதியம்மாளைப் பார்த்ததும், காலில் விழுந்து வணங்கியதாக அந்தச் செய்திகள் தெரிவிக்கின்றன.
சில மாதங்களுக்கு முன், உடல் நிலை சீர்குலைந்து, நினைவு தப்பிய நிலையில் மலேசியாவிலிருந்து சென்னை வந்த பார்வதி அம்மாவுக்கு சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கக் கூட அனுமதி மறுக்கப்பட்டது. அவரை வந்த விமானத்திலேயே திருப்பி அனுப்பினர் போலீசார்.
இதனால் அவர் உடல்நிலை மேலும் மோசமடைந்தது. இந்த நிலையில் சிகிச்சை அளிக்க நிபந்தனையுடன் முன்வந்தன தமிழக - இந்திய அரசுகள். ஆனால் இதனை மறுத்துவிட்ட பார்வதி அம்மாள், மீண்டும் தன் சொந்த மண்ணுக்கே திரும்பினார். வல்வை மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications