கரூர் சர்ச்கள் மீது தாக்குதல்-இந்து முன்னணியினர் மீது வழக்கு பதிவு!

கரூர் அருகே உள்ள புகளூர் சி.எஸ்.ஐ. சர்ச், ஹைஸ்கூல் மேடு பெந்தகோஸ்தே ஜெப சபை , முல்லை நகர் ஈ.சி.ஐ. சர்ச், பைபாஸ்ரோடு ஆர்.சி. சர்ச் ஆகியவை மீது கடந்த 9ம் தேதி மர்ம நபர்கள் நள்ளிரவு நேரத்தில் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் சர்ச் கதவு, ஜன்னல்கள் அடித்து நொறுக்கப்பட்டன.
இந்தத் தாக்குதலுக்கு இந்து முன்னணியினர் தான் காரணம் என பாதிக்கப்பட்ட சர்ச் பாஸ்டர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அதன் பேரில் இந்து முன்னணியினர் மீது வேலாயுதம்பாளையம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
நேற்றும், இன்றும் கரூர் பகுதியில் விநாயகர் சதூர்த்தி ஊர்வலம் நடைபெற்றதால் இந்து முன்னணியினர் முக்கிய நிர்வாகிகள் கைது தள்ளிப் போனதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஊர்வலங்கள் முடிந்த பின் இந்து முன்னணி நிர்வாகிகள் கைது செய்யப்படலாம் என்று தெரிகிறது.
பாதிரியார் மீது தாக்குதல்-கிறிஸ்தவர்கள் பேரணி:
இந் நிலையில் குமரி மாவட்டம் குலசேகரம் நாககோடு பகுதியில் உள்ள கத்தோலிக்க ஆலய வாளகத்தி்ல் சமூக நலக் கூடம் கட்டப்பட்டு வருகிறது. இந்த பணிகளை திருவட்டாரை சேர்ந்த காண்டிரக்டர் செய்து வந்தார்.
இதில் பணம் கொடுக்கல், வாங்கல் சம்பந்தமாக ஆலய நிர்வாகத்திற்கும், காண்டிரக்டருக்கும் பிரச்சனை இருந்து வந்தது. கடந்த 20ம் தேதி மாலை ஆலய வாளகத்தில் நின்று கொண்டிருந்த பங்கு தந்தை எக்கர்மென்ஸ் மைக்கேல் என்பவரை சிலர் தாக்கியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து பங்கு தந்தையை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி குலசேகரம் வட்டார ஐக்கிய கிறிஸ்தவ பேரவை சார்பில் நேற்று மாலை குலசேகரம் நாககோடு சந்தி்ப்பில் இருந்து அரசமூடு சந்திப்பு வரை கண்டனப் பேரணி நடந்தது.
பேரணியை குலசேகரம் வட்டார கிறிஸ்வத ஐக்கிய பேரவை துணை தலைவர் கிறிஸ்டோபர் தொடங்கி வைத்தார். இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications