மீண்டும் உச்சத்தில் பங்குச் சந்தை... 19000 புள்ளிகளைத் தொட்டது சென்செக்ஸ்!
Subscribe to Oneindia Tamil

இன்று காலை வர்த்தகம் தொடங்கிய சில நிமிடங்களில் 19000 புள்ளிகளைக் கடந்தது சென்செக்ஸ். தேசிய பங்குச் சந்தை நிப்டி 5700 புள்ளிகளைக் கடந்தது.
சர்வதேச பொருளாதார வீழ்ச்சிக்குப் பிந்தைய காலகட்டத்தில், முதல்முறையாக இந்த பங்குச் சந்தை இந்த உச்ச நிலையை அடைந்துள்ளது.
இன்றைய வர்த்தகத்தில் எண்ணெய் நிறுவனங்கள், வங்கித் துறை மற்றும் பொதுத்துறை நிறுவனப் பங்குகள் நல்ல உயர்வு கண்டன.
இந்தியாவில் இது பண்டிகைக் காலம் என்பதால், சென்டிமெண்டாக முதலீடுகளில் இறங்கியுள்ளனர் மக்கள். இந்திய பங்குச் சந்தை உயர்வுக்கு இது மிக முக்கிய காரணம். விஜய தசமி மற்றும் தசராவின்போது இன்னும் உயர்வு காணப்படும் என்று பங்குச் சந்தை கணிப்பாளர்கள் தெரிவித்தனர்.
காலை 11 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 19084.80 புள்ளிகளாகவும், நிப்டி 5719.60 புள்ளிகளாகவும் இருந்தது.












Click it and Unblock the Notifications