அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் புதிய சம்பள உயர்வு: அரசாணை வெளியீடு
சென்னை: அரசு ஊழியர்களுக்கான ஊதிய முரண்பாடுகளைக் களையும் வகையில் புதிய உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 6-வது ஊதியக் குழுவின் பரிந்துரையின்படி சம்பளம் கடந்த ஆண்டு உயர்த்தப்பட்டது. இந்த சம்பள உயர்வில் பல்வேறு துறை ஊழியர்களுக்கு ஊதிய முரண்பாடு இருப்பதாக சங்கங்கள் புகார் தெரிவித்தன.
இதையடுத்து ஊதிய முரண்பாடுகளை களைய ஒரு நபர் கமிஷன் அமைக்கப்பட்டது. இந்த கமிஷன் அரசு ஊழியர் சங்க பிரதிநிதிகளிடம் இருந்து கோரிக்கைகளை பெற்று பரிசீலித்தது. ஊதிய முரண் பாடுகளை களைந்து தமிழக அரசு உத்தரவிட்டது.
இதன் மூலம் பல்வேறு துறை அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு சம்பளம் உயர்ந்துள்ளது. இதன்படி ஒவ்வொரு வகையான பத விக்கும் மாற்றியமைக்கப்பட்ட சம்பள விகிதங்களுக்கான அரசாணைகள் வெளியிடப்பட்டுள்ளன.
மொத்தம் 87 வகை பதவிகளுக்கான புதிய சம்பள விகிதங்கள் பற்றிய 191 பக்கங்களில் இந்த அரசாணைகள் வெளியிடப்பட்டுள்ளன. புதிய விகிதங்கள் 2006 ஜனவரியில் இருந்து அமல்படுத்தப்பட்டாலும் பணப் பயன் இந்த ஆண்டு ஆகஸ்ட் 1-ந்தேதியில் இருந்து வழங்கப்படும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அரசாணைகளை தமிழக அரசின் இணைய தளமான www.tn.gov.in ல் பார்க்கலாம்.
-
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன்












Click it and Unblock the Notifications