தட்டுத் தடுமாறி இந்தி பேசிய ப.சிதம்பரம்-இந்தியை செழிப்பாக்க கோரிக்கை
டெல்லி: டெல்லியில் நடந்த இந்தி தின நிகழ்ச்சியின்போது தட்டுத் தடுமாறி இந்தியில் பேசி அனைவரையும் கவர்ந்தார் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம். இந்தி மொழியை மேம்படுத்தவும், சிறப்பிக்கவும் அனைவரும் இந்தியில் பேச, எழுத முன்வர வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.
டெல்லியில் நேற்று இந்தி தினம் கொண்டாடப்பட்டது. அதில் ப.சிதம்பரம் கலந்து கொண்டு இந்திரா காந்தி தேசியமொழி விருதுகளை வழங்கினார். இந்தி தின விழா என்பதால் இந்தியில் சில வார்த்தைகளையாவது பேச விரும்பிய ப.சிதம்பரம் தட்டுத் தடுமாறி பேசினார்.
தனது தொடக்க உரையை வாசிக்கத் தொடங்கிய ப.சிதம்பரம் சில வார்த்தைகளை இந்தியில் பேசினார். இதைப் பார்த்து கூட்டத்தினர் வியப்படைந்தனர். ஆங்கிலத்தில் மடை வெள்ளம் போல பேசும் ப.சிதம்பரம் இந்தியில் தட்டுத் தடுமாறிப் பேசியதைப் பார்த்து அவர்கள், ப.சிதம்பரத்தை ஊக்கப்படுத்தும் வகையில் கை தட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
பின்னர் ஆங்கிலத்திற்குத் தாவினார் ப.சிதம்பரம். தனது உரையை முடிக்கும்போது மீண்டும் இந்திக்குத் திரும்பிய அவர் இந்தியிலேயே தனது உரையை நிறைவு செய்தார்.
நிகழ்ச்சியில் ப.சிதம்பரம் பேசுகையில், அனைத்து அரசுத் துறை அலுவலகங்களும் இந்தி மொழியை வளர்க்கும் வகையில் தகவல் தொடர்புகளை இந்தியிலேயே மேற்கொள்ள வேண்டும் என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications