காஷ்மீர் எங்களுக்குச் சொந்தமானது-அமெரிக்காவிடம் திட்டவட்டமாக கூறிய பாக்.
வாஷிங்டன்: காஷ்மீரில் ஊடுறுவல்களைத் தடுக்குமாறு கூறிய அமெரிக்காவிடம், அதுகுறித்து எங்களை அடிக்கடி தொந்தரவு செய்யாதீர்கள். உண்மையில் காஷ்மீர் எங்களுக்குச் சொந்தமானது என்று பாகிஸ்தான் திட்டவட்டமாக கூறியது தெரிய வந்துள்ளது.
கடந்த 2002ம் ஆண்டு இந்த தகவல் பரிமாற்றம் நடந்துள்ளது. அப்போதைய அமெரிக்க வெளியுறவுத்துறை திட்ட உருவாக்கத் துறை இயக்குநர் ரிச்சர்ட் ஹாஸ் மற்றும் பாகிஸ்தான் ராணுவ அதிகாரி ஒருவருக்கு இடையே அக்டோபர் 31ம் தேதி நடந்த பேச்சுவார்த்தையின்போது இப்படித் தெரிவித்துள்ளார் பாகிஸ்தான் ராணுவ அதிகாரி.
இதுதொடர்பான ரகசிய ஆவணம் தற்போது வெளியாகியுள்ளது. அதில், காஷ்மீர் மற்றும் இந்தியாவுக்குள் பாகிஸ்தானிய தீவிரவாதிகள் ஊடுறுவி வருவது குறித்த பிரச்சினையை எழுப்பிய ஹாஸ், காஷ்மீர் வழியாக இந்தியாவுக்குள் ஊடுறுவுவதை பாகிஸ்தான் நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.
அதற்கு பாகிஸ்தான் ராணுவ அதிகாரி பதிலளிக்கையில், காஷ்மீர் விவகாரம் குறித்து தொடர்ந்து அமெரிக்கா பேசிக் கொண்டிருக்கத் தேவையில்லை. காஷ்மீர் எங்களுக்குச் சொந்தமானது என்று கூறியுள்ளார் என அந்த ஆவணம் தெரிவிக்கிறது.
காஷ்மீரில் பிரிவினைவாத சக்திகளின் ஆதரவுடன் வன்முறை தலைவிரித்தாடும் வரும் நிலையில், தற்போது இந்த ரகசிய ஆவணத்தை அமெரிக்கா வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications