என்ன தீர்ப்பு வந்தாலும் ராமர் கோவிலை கட்டியே தீருவோம்: ராம கோபாலன்

நிருபர்களிடம் பேசிய அவர், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவை எங்கும் இஸ்லாமியர்கள் மத மோதல்களை செய்து கொண்டிருக்கிறார்கள்.
தென் கொரியாவில் சாலையெங்கும் புத்த சிலைகள் நிறைந்திருந்தது. அப்போது அமெரிக்க பிரதிநிதிகள் தென் கொரிய பிரதிநிதிகளிடம் சாலையெங்கும் இருக்கக்கூடிய புத்தர் சிலையை எடுத்து விடுங்கள் என்று சொல்லியதன் பேரில், தென் கொரிய பிரதிநிதிகள் சிறிய சிலைகளை எடுத்தார்கள்.
சிலைகளை எடுப்பதற்கு முன்னர் பௌத்தர்கள் 60 சதவீதம் இருந்தார்கள். கிருஸ்தவர்கள் 40 சதவீதம் இருந்தார்கள். சிலைகளை எடுத்தப் பின்னர் கிருஸ்தவர்கள் 60 சதவீதமாக மாறிப்போனார்கள். பௌத்தவர்கள் 40 சதவீதமே இருக்கின்றனர்.
அதே போலத்தான், இங்கேயும் சாலைகளில் உள்ள கோவில்களை அகற்றிவிட்டு, சர்ச்சுகளும் மசூதிகளும் நிறைந்துவிட்டன.
அயோத்தியில் உள்ள இடம் யாருக்கு சொந்தம் என அலகாபாத் நீதிமன்றம் தீர்ப்பு அறிவிக்க உள்ள இந்த நேரத்தில், நாம் சொல்லிக்கொள்வது என்னவென்றால், என்ன தீர்ப்பு வந்தாலும் கவலையில்லை. ராமர் கோவிலை அங்கே கட்டியே தீருவோம்.
விஸ்வ இந்து பரிஷத் தலைவர் அசோக் சிங்கால் தீர்ப்பை மதிப்போம் என்கிறார். ஆனால், இஸ்லாமியர்கள் யாரும் தீர்ப்பை மதிப்போம் என்று சொல்லவில்லை. இதற்கிடையே தீர்ப்பு வரும் இந்த நேரத்தில் இஸ்லாமியர்களின் மனைவிகளும், குழந்தைகளும் பத்திரமான இடத்திற்கு அனுப்பப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அப்படி என்றால், ஏதோ ஒரு பெரிய கலவரத்தை அரங்கேற்ற இவர்கள் திட்டமிட்டிருக்கிறார்கள்.
கோயம்பத்தூரில் கல்லூரி மாணவிகளை இஸ்லாம் இளைஞர்கள், பேச்சுக் கொடுத்து மயக்கி 'லவ் ஜிகாத்' என்ற முறையில் அவர்களை இஸ்லாமுக்கு மாற்றுகிறார்கள். மாற்றியதோடு மட்டுமல்லாமல், அவர்களை இந்துகளுக்கு எதிராக பயங்கரவாதிகளாக மாற்றுகிறார்கள்.
முதல்வர் கருணாநிதி திருந்திவிட்டார், அவருக்கு தெய்வ பக்தி வந்துவிட்டது என்று பலர் சொல்லுகிறார்கள். ஆனால் அது சுத்தப் பொய். அவர் எப்போதும் திருந்தவே மாட்டார். அவர் எப்போதும் இந்துகளுக்கு எதிராகத்தான் இருப்பார்.
கல்லூரிகளில் பள்ளிகளில் இஸ்லாமியர்களுக்கும், கிருஸ்துவர்களுக்கும் அளிக்கப்படும் சலுகைகளை இந்து மாணவர்களுக்கும் அளிக்கப்பட வேண்டும் என்றார் ராம கோபாலன்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications