எஸ்.ஐயை சஸ்பெண்டு செய்ய கோரி வக்கீல்கள் போராட்டம்
பட்டுக்கோட்டை: பட்டுக்கோட்டையில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை வழக்கறிஞர் ராஜரானும், பட்டுக்கோட்டை சப்- இன்ஸ்பெக்டர் சுகுமாரனும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.
இதனையடுத்து, சப்-இன்ஸ்பெக்டரை பணியிடை நீக்கம் செய்யக் கோரி வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
முன்னாள் அதிமுக பட்டுக்கோட்டை நகரச் செயலாளர் வழக்கறிஞர் விவேகானந்தன். இவரது மகன் ராஜராஜன். இவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கறிஞராக உள்ளார்.
சில நாட்களுக்கு முன்பு பட்டுக்கோட்டை வந்தபோது, நகரின் மையப் பகுதியில் உள்ள மணிக்கூண்டு அருகில் தனது காரை நிறுத்திவிட்டு ஷாப்பிங் சென்றுள்ளார்.
அப்போது, அங்கு வந்த பட்டுக்கோட்டை சப்-இன்ஸ்பெக்டர் சுகுமாரன் அந்த காரை எடுக்கச் சொல்ல, ஷாப்பிங் முடிந்து எடுக்கிறேன் என்று வழக்கறிஞர் சொல்ல, இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பில் முடிந்தது.
இதனால் இருவரும் பட்டுக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் செய்துவிட்டு மருத்துவமனையில் சேர்ந்தனர்.
இந் நிலையில் வழக்கறிஞர் ராஜராஜனை தாக்கிய சப்-இன்ஸ்பெக்டர் சுகுமாரனை பணி இடைநீக்கம் செய்யவேண்டும் என்றும், அவரை பணி இடைநீக்கம் செய்யும்வரை நீதிமன்றத்தை புறக்கணிக்கப் போவதாகவும் பட்டுக்கோட்டை வழக்கறிஞர்கள் சங்கத் ராமையா தெரிவி்த்துள்ளார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications