இலவச கலர் டிவிக்கள் வழங்குவதில் சிக்கல்: டிவிக்களை எடுத்துச் செல்ல முயற்சி
செங்கோட்டை: செங்கோட்டையில் பொதுமக்களுக்கு வழங்கப்பட இருந்த இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகளை வருவாய் துறையினர் லாரியில் எடுத்துச் செல்ல முயற்சி செய்தனர். இதற்கு நகர்மன்ற தலைவர், கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
செங்கோட்டையில் பொதுமக்களுக்கு வழங்குவதற்காக 7, 400 இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் வந்தன. தென்காசி எம்.எல்.ஏ. கருப்பசாமி பாண்டியன் கடந்த வாரம் இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி வழங்குவதை துவங்கி வைத்தார். 6,800 பயனாளிகளுக்கு இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் வழங்கப்பட்டன.
இதில் பல பயனாளிகள் இடம் மாறி இருந்ததாலும், வெளியூர் சென்றிருந்ததாலும், தொலைக்காட்சிப் பெட்டி வழங்குவது தாமதமாக நடந்து வந்தது. இந்நிலையில் பொதுமக்களுக்கு வழங்க இருந்த மீதமுள்ள 550 வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் அங்குள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வைக்கப்பட்டிருந்தன.
ஆனால் வருவாய் துறை மக்களுக்கு தொலைக்காட்சிப் பெட்டிகளை வழங்கி விட்டதாகக் கூறி அவற்றை லாரியில் எடுத்துச் செல்ல முயன்றனர்.
தகவல் அறிந்த நகர்மன்ற தலைவர் ரஹீம், கவுன்சிலர்கள் கல்யாணி, கணேசன், சங்கரலிங்கம் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்து லாரியை முற்றுகையிட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு வழங்க இருந்த 250 கலர் டிவிக்களை தவிர மீதமுள்ள 300 டிவிக்களை அவர்கள் எடுத்துச் செல்ல அனுமதித்தனர்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications