சோராபுதீன் போலி என்கெளண்டர் வழக்கு-முக்கிய சாட்சி அஸம் கான் சுடப்பட்டார்

உத்யபூர் புறநகர்ப் பகுதியில் வைத்து அடையாளம் தெரியாத இருவர் அஸம் கானை சுட்டுள்ளனர். இதில் அஸம்கானுக்கு கையில் காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அவர் அபாயகரமான நிலையில் இல்லை என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். அவரை சுட்ட இருவரும் தப்பி ஓடி விட்டனர்.
இந்த அஸம்கான் தான், சோராபுதீனை சுட்டுக் கொல்ல ராஜஸ்தானைச் சேர்ந் மார்பிள் தொழிலதிபர்கள் சேர்ந்து ரூ. 10 கோடி பணத்தைக் கொடுத்து, முன்னாள் உள்துறை அமைச்சர் அமீத் ஷா மூலம் காரியத்தை சாதித்துக் கொண்டதாக தெரிவித்திருந்தார்.
இந்தத் தகவல்களை இன்னொரு போலி என்கெளண்டர் மூலம் சுட்டுக் கொல்லப்பட்ட பிரஜாபதி சிறையில் வைத்து தன்னிடம் தெரிவித்ததாகவும் அவர் கூறியிருந்தார். சோராபுதீனை போலீஸார் சுட்டுக் கொன்றதை நேரில் பார்த்த ஒரே சாட்சி பிரஜாபதிதான். சோராபுதீன் என்கவுன்டருக்குப் பிறகு பிரஜாபதி மர்மமான முறையில் தற்கொலை செய்து கொண்டு விட்டார். ஆனால் அவரும் போலி என்கெளண்டர் மூலமாக சுட்டுக் கொல்லப்பட்டதாக அஸம்கான் கூறியிருந்தார்.
ராஜஸ்தானைச் சேர்ந்த முன்னாள் பாஜக அமைச்சர் குலாப் சந்த் கத்தாரியாதான் சோராபுதீனை தீர்த்துக் கட்டும் பொறுப்பை ஏற்றுக் கொண்டதாகவும், ராஜஸ்தானில் வைத்து அதை நிறைவேற்ற அப்போதைய முதல்வர் வசுந்தரா ராஜே உடன்படாததால், திட்டத்தை குஜராத்துக்கு கத்தாரியா மாற்றியதாகவும் அஸம் கான் கூறியிருந்தார்.
இந்தத் தகவல்களைக் கூறியதால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும கூறியிருந்தார் அஸம்கான். இந்த நிலையில்தான் அவரைக் கொல்ல முயற்சி நடந்துள்ளது. மார்பிள் மாபியா கும்பல்தான் இதற்குக் காரணமாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications