சென்னை-50 வயதுப் பெண் பன்றிக் காய்ச்சலுக்குப் பலி
சென்னை: தமிழகத்தில் பன்றிக் காய்ச்சல் படு வேகமாக பரவி வருகிறது. தினசரி ஒருவர் உயிரிழந்து வருகின்றனர். இந்த நிலையில் சென்னையில் இன்று ஒரு பெண் உயிரிழந்தார்.
தமிழ்நாட்டில் கன்னியாகுமரி, கோவையை அடுத்து சென்னையில் பன்றிக் காய்ச்சல் நோய் பரவுகிறது. சில நாட்களுக்கு முன் தலைமை செயலகத்தில் உதவி மக்கள் தொடர்பு அதிகாரியாக பணிபுரிந்த மோகனவேல் பன்றிக் காய்ச்சலுக்கு பலியானார். அதைத் தொடர்ந்து கோவை, கன்னியாகுமரி எ பன்றிக் காய்ச்சலுக்கு சிலர் உயிரிழந்தனர். நேற்று ஓசூரில் ஒருவர் பன்றிக் காய்ச்சலுக்கு இறந்தார்.
தற்போது சென்னையில் இன்னொருவர் பன்றிக் காய்ச்சலுக்குப் பலியாகியுள்ளார். அவரது பெயர் குப்பம்மாள், 50 வயதுப் பெண்.
திருவேற்காடு தேவி நகர் 6-வது தெருவில் வசித்து வந்தார்.
குப்பம்மாளுக்கு கடந்த ஒரு வாரமாக விட்டுவிட்டு காய்ச்சல் இருமல் இருந்தது. வீட்டிலேயே தங்கி சிகிச்சை பெற்றார். நேற்று காலை திருவேற்காட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் அவரை பரிசோதித்து பார்த்து விட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவரது ரத்த மாதிரி சளி ஆகியவை பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதில் அவருக்கு பன்றிக்காய்ச்சல் தாக்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர்.
இந்த நிலையில் இன்று அதிகாலை 2.30 மணி அளவில் சிகிச்சை பலனின்றி இறந்தார். குப்பம்மாளுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications