தாராபுரம் அருகே உயர் ஜாதியினர் அமைத்த தீண்டாமை வேலிகள் அகற்றம்
தாராபுரம்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உயர் ஜாதியினர் அமைத்த இரண்டு வேலிகளை போலீஸாரும், வருவாய்த்துறை அதிகாரிகளும் விரைந்து சென்று அகற்றினர்.
தாராபுரம் அருகே உள்ள என்.குமாரபாளையம் கிராமத்தில், ஒரு ஜாதியைச் சேர்ந்த 150 குடும்பத்தினர் சேர்ந்து தலித் வகுப்பைச் சேர்ந்த 50 குடும்பத்தினர் தங்களது பகுதிக்குள் வராமல் தடுக்கும் வகையில் முள்வேலிகளை அமைத்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
அவர்கள் வேலி அமைத்த பகுதியில் உள்ள இரண்டு சாலைகளை தலித் மக்கள் பயன்படுத்த முடியாமல் போனது. உயர் ஜாதியினர் என்று கூறிக் கொள்வோர் தங்களது பகுதியில் உள்ள மூதாதையரின் சமாதிகள் உள்ள பகுதிகள் வழியாக தலித் வகுப்பினர் நடமாடினால் அவை பாழ்பட்டு விடும், புனிதம் கெட்டு விடும் எனவேதான் வேலிகள் அமைத்ததாக கூறினர்.
தகவல் அறிந்ததும் போலீஸாரும் வருவாய்த்துறையினரும் விரைந்து வந்து இந்த வேலிகளை அகற்றினர்.
மதுரை மாவட்டம் உத்தப்புரத்தில் தலித்களைப் பிரிக்கும் வகையில் அமைக்கப்பட்ட தீண்டாமைச் சுவர் உடனடியாக தீர்வு காணப்படாத காரணத்தால் இன்றுவரை பெரும் பிரச்சினையாக உள்ளது. இந்த நிலையில் தாராபுரம் அருகே அதே பாணியில் எழுந்த ஜாதிப் பிரச்சினையில் போலீஸார் உடனடியாக தலையிட்டு தீண்டாமை வேலிகளை பிய்த்து எறிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications