முதல்வர் வீட்டுக்குள் நுழைய முயன்று பிடிபட்ட வீரப்பன் தங்கை மகன்
சென்னை: முதல்வர் கருணாநிதியின் வீட்டுக்குச் செல்ல முயன்ற சந்தனக் கடத்தல் வீரப்பனின் தங்கை மகனை போலீஸார் தடுத்து நிறுத்தினர்.
கோபாலபுரத்தில் முதல்வர் கருணாநிதியின் வீடு உள்ளது. இப்பகுதி பலத்த பாதுகாப்பு வளையத்தின் கீழ் உள்ளது. இந்த நிலையில் நேற்றுகாலை இப்பகுதிக்குள் ஒரு வாலிபர் சந்தேகத்திற்கிடமான வகையில் சென்று கொண்டிருந்தார். முதல்வர் வீட்டை நோக்கி அவர் சென்றார்.
இதையடுத்து போலீஸார் அவரை தடுத்து நிறுத்தினர். உடனடியாக ராயப்பேட்டை காவல் நிலையத்திற்குக் கொண்டு சென்று விசாரித்தனர். அப்போது அவரது பெயர் சதீஷ்குமார், வயது 24, சந்தனக் கடத்தல் வீரப்பனின் மறைந்த தங்கை மாரியம்மாளின் மகன் என்று தெரிய வந்தது.
ஏன் முதல்வர் வீட்டுக்கு வந்தீர்கள் என்று கேட்டபோது, கடந்த 1995ம் ஆண்டு எனது தந்தை அர்ஜூனனை கர்நாடக போலீஸார் பிடித்துச் சென்றனர். இதுவரை அவர் விடுவிக்கப்படவில்லை. இதுகுறித்து முதல்வரிடம் முறையிட்டு அனு அளிப்பதற்காக வந்ததாக தெரிவித்தார் சதீஷ்குமார்.
தீய நோக்கத்தோடு அவர் வரவில்லை என்று தெரிய வந்ததைத் தொடர்ந்து சதீஷ்குமாரை போலீஸார் விடுவித்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications