விநாயகர் சிலை வைப்பதில் தகராறு: இந்து முன்னணி பிரமுகர் கொலை
சென்னை: விநாயகர் சிலை வைப்பது தொடர்பாக இந்து முன்னணி தொண்டர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் ஒருவர் பீர் பாட்டிலால் குத்திக் கொலை செய்யப்பட்டார்.
சென்னை நெற்குன்றம் மூகாம்பிகை நகரைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி பிரபாகரன் (25). இந்து முன்னணி தொண்டரான இவர் விநாயகர் சதுர்த்தியையொட்டி நெற்குன்றம் திருமலை நகரில் 5 அடி உயர விநாயகர் சிலை ஒன்றை வைத்தார்.
இதற்கு அதே பகுதியைச் சேர்ந்த இன்னொரு இந்து முன்னணி தொண்டரான காண்டீபன் (30) என்பவர் எதிர்ப்பு தெரிவித்தார். தனது தந்தைதான் வழக்கமாக இந்த இடத்தில் விநாயகர் சிலை வைப்பார் என்பதால், பிரபாகரன் அங்கு சிலை வைக்கக் கூடாது என்று எதிர்ப்புத் தெரிவித்தார்.
இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து இந்து முன்னணி பிரமுகர்கள் தலையீட்டு இருவருக்கும் சமரசம் செய்து வைத்தனர்.
இந் நிலையில் சில நாட்களுக்கு முன் சின்மயா நகர் காளியம்மன் கோவில் அருகே நடந்து சென்ற பிரபாகரனை காண்டீபன், அவரது நண்பர்கள் பாண்டியன், சதீஷ், செந்தில், ஈஸ்வரன் ஆகியோர் வழிமறித்து அடித்து உடைத்தனர்.
பீர் பாட்டிலால் பிரபாகரின் கழுத்து, தலை, வயிற்றில் சரமாரியாக குத்திவிட்டு தப்பியோடிவிட்டனர். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த பிரபாகரன் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இது தொடர்பான கோயம்பேடு போலீஸார் வழக்கு பதிவு செய்து பாண்டியன், சதீஷ், செந்தில் ஆகியோரை கைது செய்தனர்.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு பிரபாகரன் இறந்தார்.
இதையடுத்து இன்று ஈஸ்வரனும் கைது செய்யப்பட்டார். முக்கிய குற்றவாளியான காண்டீபன் தலைமறைவாகிவிட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications