சோராபுதீன் வழக்கில் கைதான அமீத் ஷாவை சிறையில் சந்தித்த அத்வானி
Subscribe to Oneindia Tamil
அகமதாபாத்: சோராபுதீன் போலி என்கவுண்டர் வழக்கில் கைதாகி சபர்மதி சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் குஜராத் அமைச்சர் அமீத் ஷாவை, பாஜக மூத்த தலைவர் அத்வானி சந்தித்துப் பேசினார்.
ஏற்கனவே செப்டம்பர் 11ம் தேதி அருண் ஜெட்லி சிறைக்கு வந்து அமீத் ஷாவை சந்தித்துப் பேசினார். இந்த நிலையில் அத்வானியே வந்து அமீத் ஷாவை சந்தித்திருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும், கடந்த ஐம்பது ஆண்டுகளாக காங்கிரஸை வெல்ல முடியாமல் இருந்து வந்த கத்லால் சட்டசபைத் தொகுதிக்கு நடந்த இடைத் தேர்தலில் பாஜக பெரும் வெர்றி பெற்ற நிலையில் அமீத் ஷாவை சந்தித்துள்ளார் அத்வானி.
பின்னர் சிறைக்கு வெளியே அத்வானி பேசுகையில், குஜராத்தில் உள்ள பாஜக அரசுக்கு எதிராக சிபிஐயை ஒரு ஆயுதமாக பயன்படுத்துகிறது காங்கிரஸ் என்று குற்றம் சாட்டினார்.












Click it and Unblock the Notifications