தமிழகத்தில் 2 லட்சம் அரசு பணியிடங்கள் காலி: பணியாளர் சங்கத் தலைவர்
நெல்லை: தமிழகத்தில் காலியாக உள்ள 2 லட்சம் அரசுப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று மாநில அரசுப் பணியாளர் சங்கத் தலைவர் பிச்சையா கேட்டுக் கொண்டுள்ளார்.
இது குறித்து நெல்லையில் நேற்று மாநில அரசுப் பணியாளர் சங்கத் தலைவர் பிச்சையா நிருபர்களிடம் கூறியதாவது,
தமிழக அரசு ஒரு நபர் பரிந்துரைப்படி அரசு பணியாளர்களில் 50 பதவிப் பிரிவினருக்கும், 225 தர ஊதியங்களிலும் ஊதிய உயர்வு வழங்கி வரவேற்கத் தக்க முடிவுகளை அறிவித்துள்ளது.
முந்தைய ஊதிய குழுக்களால் ஏற்பட்ட முரண்பாடுகளும் சரி செய்யப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கை பாராட்டத்தக்கது. அதே நேரத்தில் அரசுத் துறைகளில் ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களால் மக்கள் சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பொதுமக்களுக்கும், அரசு பணியாளர்களுக்கும் இடையே உள்ள உறவு சீர்கெட்டுள்ளது.
எனவே, தமிழகம் முழுவதும் உள்ள 2 லட்சம் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள், கிராம உதவியாளர்கள், ஊராட்சி எழுத்தர்கள், மருத்துவத் துறை ஒப்பந்த பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். பங்கேற்பு ஊதியம் என்ற தி்ட்டத்தின்படி குடும்ப ஓய்வூதியம் மறுக்கப்பட்டு வருகிறது.
சிறப்பு ஓய்வூதியம், பங்கேற்பு ஓய்வூதியம் ஆகியவற்றை மாற்றி ஓய்வூதிய விதிப்படி அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி அடுத்த மாதம் 9-ம் தேதி விழுப்புரம் மீனாட்சி மஹாலில் மாநில அளவிலான கருத்தரங்கம் நடத்த உள்ளோம் என்றார் அவர்.
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை












Click it and Unblock the Notifications