சென்னையில் இன்று 2000 விநாயகர் சிலைகள் கரைப்பு: 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு
சென்னை: சென்னையில் 10 ஆயிரம் போலீசார் பூடை சூழ 2000 விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் சென்று கடலில் கரைக்கப்பட்டது.
கடந்த 11-ம் தேதி விநாயகர் சதுர்த்தி விமர்சையாகக் கொண்டாடப்பட்டது. மிழகம் முழுவதும் பல இடங்களில் விநாயகர் சிலை வைத்து பூஜை செய்யப்பட்டு வந்தது. சென்னையில் மட்டும் 1,500 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டிருந்தன. கடந்த 8 நாட்களாக பூஜிக்கப்பட்ட இந்த சிலைகளில் 200 சிலைகளை மட்டும் நேற்று ஊர்வலமாக எடுத்துச் சென்று கடலில் கரைத்தனர்.
இந்த ஆண்டு இந்து முன்னணி சார்பில் சென்னையில் 767 விநாயகர் சிலைகள் பூஜை செய்யப்பட்டு கடலில் கரைக்கப்பட்டன.
சூளை கண்ணப்பர் திடல், திருவல்லிக்கேணி பெரிய தெரு, திருவட்டீஸ்வரன் பேட்டை விநாயகர் கோவில், வள்ளுவர் கோட்டம், புளியந்தோப்பு, சிந்தாதிரிப்பேட்டை, கே.கே.நகர் ஆகிய பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகளை பட்டினப்பாக்கம் கடலில் கரைத்தனர்.
இதேபோன்று நீலாங்கரை பல்கலை நகர், எண்ணூர் ராமகிருஷ்ணா நகர், காசிமேடு மீன்பிடி துறைமுகம் ஆகிய இடங்களில் விநாயகர் சிலைகளும் கடலில் கரைக்கப்பட்டன.
சென்னையில் விநாயகர் சிலைகள் ஊர்வலமாகச் செல்லும்போது அசம்பாவிதம் எதுவும் நடக்காமல் இருக்க 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். இன்று சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த 2 ஆயிரம் விநாயகர் சிலைகளை கடலில் கரைத்தனர்.
சிலைகளை கரைக்கும் போது கடலில் மூழ்குபவர்களை மீட்கும் பணியில் 50-க்கும் மேற்பட்ட நீச்சல் பயிற்சி பெற்ற மீனவ வாலிபர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மெரீனா கடற்கரையில் போலீசார் கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து கண்காணித்து வந்தனர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications