டெல்லி ஜூம்மா மசூதி துப்பாக்கிச் சூடு-மும்பையில் 2 பேர் கைது

இந்தியன் முஜாஹிதீன் அமைப்பு அனுப்பிய இ மெயில் தொடர்பாக இவர்களிடம் விசாரிக்கப்பட்டு வருகிறதாம். ஜூம்மா மசூதி சம்பவத்திற்கு தாங்களே பொறுப்பேற்பதாக இந்தியன் முஜாஹிதீன் உரிமை கோரியுள்ளது நினைவிருக்கலாம்.
அந்த இமெயில் மும்பையிலிருந்து அனுப்பப்பட்டது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. மும்பையின் பொரிவிலி பகுதியிலிருந்து அந்த மெயில் வந்தது தெரிய வந்துள்ளது.
டாடா செல்போனைப் பயன்படுத்தி அதிலிருந்து மெயில் அனுப்பியுள்ளனர். போலியான அடையாள அட்டையைக் காட்டி அதற்கான சிம் கார்டைப் பெற்றுள்ளனர்.
சிம் கார்டு வாங்க சமர்ப்பிக்கப்பட்ட முகவரிச் சான்று ஆவணத்தை பரிசோதித்த போலீஸார் அந்த முகவரிக்குச் சென்று பார்த்தபோது அது போலியானது என்பது தெரிய வந்தது. அந்தப் பெயரில் யாரும் வசிக்காதது தெரிய வந்தது.
இந்த நிலையில்தான் 2 பேர் போலீஸ் பிடியில் சிக்கியுள்ளனர். அவர்கள் குறித்த விவரத்தை போலீஸார் தெரிவிக்கவில்லை. இருப்பினும் அவர்களுக்கு துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இருவரில் ஒருவர் பழைய குற்றவாளி என்று சந்தேகிக்கப்படுகிறது.
உள்ளூரைச் சேர்ந்த இந்த பழைய கிரிமினல்களைப் பயன்படுத்தி இந்தியன் முஜாஹிதீன் அமைப்பு பயமுறுத்தும் வகையில் இந்த தாக்குதலை அரங்கேற்றியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications