காமன்வெல்த் போட்டிக்கு பெரும் பின்னடைவு-நேரு ஸ்டேடிய நடை மேம்பாலம் உடைந்து 23 பேர் காயம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: ஏற்கனவே கடும் சர்ச்சைக்குள்ளாகியுள்ள டெல்லி காமன்வெல்த் போட்டிக்கு இன்று மேலும் ஒரு பெரும் சோதனை ஏற்பட்டு விட்டது. போட்டியின் தொடக்க விழா மற்றும் நிறைவு விழா நடைபெறவுள்ள ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்திற்கு வெளியே கட்டப்பட்டு வரும் நடை மேம்பாலம் இன்று இடிந்து விழுந்து 23 பேர் படுகாயமடைந்தனர்.
காயமடைந்த அனைவரும் சப்தர்ஜங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். பாலத்தின் ஒரு பகுதியில் கான்க்ரீட் போடும் வேலை நடந்து கொண்டிருந்தபோதுதான் இந்த விபத்து நேரிட்டது.
100 மீட்டர் நீளமுடைய இந்த நடை மேம்பாலம், ஸ்டேடியத்தையும், கார் பார்க்கிங் பகுதியையும் இணைப்பதற்காக கட்டப்பட்டு வருகிறது.
போட்டியின் தொடக்க விழாவும், நிறைவு விழாவும் இங்குதான் நடைபெறவுள்ளது. மேலும், பல முக்கியப் போட்டிகளும் இங்குதான் நடைபெறவுள்ளது. பெருமளவில் ரசிகர்கள் திரண்டு வருவாம் இடமாக உள்ள இங்கு கட்டப்பட்டு வரும் நடை மேம்பாலம் இடிந்து விழுந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கட்டுமானப் பணிகள் குறித்தும் பெரும் கேள்விக்குறி எழுந்துள்ளது.













Click it and Unblock the Notifications