வங்கதேசம் வழியே குவியும் சீன பட்டாசு: கவலையில் சிவகாசி
சிவகாசி: தீபாவளி நெருங்கும் நிலையில் சீனாவில் இருந்து வங்கதேசம் வழியாக பட்டாசுகள் இந்தியாவுக்குள் அதிகளவில் வருவதால் சிவகாசி பட்டாசுத் தயாரிப்பாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.
தீபாவளி நெருங்கிக் கொண்டிருக்கிறது. சிவகாசியில் பட்டாசுத் தயாரிப்பு முழு வீச்சில் நடைபெறுகிறது. ஆனால் செல்போன், பொம்மை உள்பட நமது தரமான தயாரிப்புக்களுக்கு போட்டியாக சட்ட விரோதமாக நம் நாட்டுக்குள் குவியும் சீன பொருட்கள் பட்டியலில் பட்டாசும் சேர்ந்து விட்டது.
வங்க தேசம் வழியாக சீன பட்டாசுகள் போலி பில் போட்டு வட மாநிலங்களை ஆக்கிரமித்து வருகின்றன. அங்கிருந்து தென்மாநிலங்களுக்கும் அனுப்பத் தயாராகி வருகின்றன.
வெளிநாட்டு பட்டாசுகளை விற்க ஏற்கனவே தடை உள்ளது. கடந்த 2 மாதங்களுக்கு முன் விருதுநகர் எம்.பி. மாணிக்க தாகூர் சிவகாசி பட்டாசு ஆலை அதிபர்களை டெல்லிக்கு அழைத்துச் சென்றார்.
மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, வர்த்தக அமைச்சர் ஆனந்த் சர்மா ஆகியோரை சந்தித்து சீன பட்டாசுகளை விற்க அனுமதிக்க கூடாது என வலியுறுத்தினார். அப்போது சீன பட்டாசுகளை விற்க அனுமதிக்க மாட்டோம் என அரசு உறுதி அளித்தது.
இந்நிலையில் மீண்டும் சீன பட்டாசுகள் வடமாநிலங்களில் தங்கு தடையின்றி வி்ற்கபடுவதாகவும், அதனால் பெரும் நஷ்டம ஏற்படும் என்றும் சிவகாசி பட்டாசுத் தயாரிப்பாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications