காமன்வெல்த் போட்டியிலிருந்து ஆஸி., இங்கிலந்து வீரர், வீராங்கனைகள் விலகல்
மெல்போர்ன்: பாதுகாப்பு மற்றும் உடல்நிலையைக் காரணம் காட்டி ஆஸ்திரேலியா, இங்கிலாந்தைச் சேர்ந்த முன்னணி தடகள வீரர், வீராங்கனைகள் சிலர் காமன்வெல்த் போட்டியிலிருந்து விலகியுள்ளனர்.
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த உலக வட்டு எறிதல் வீராங்கனையான டேனி சாமுவேல்ஸ் பாதுகாப்பு மற்றும் உடல் நிலையைக் காரணம் காட்டி விலகுவதாக அறிவித்துள்ளார்.
அதேபோல முன்னணி இங்கிலாந்து வீரர்கள் மூன்று பேரும் விலகியுள்ளனர். இவர்களில் 400 மீ்ட்டர் ஓட்டப் போட்டியில் ஒலிம்பிக் சாம்பியனான கிறிஸ்டைன் ஓரோஜனும் அடக்கம். கிறிஸ்டைன் காயம் காரணமாக விலகியுள்ளார்.
இதேபோல காமன்வெல்த் 1500 மீட்டர் சாம்பியன் லிசா டொபிரிஸ்கியும் காயம் காரணமாக விலகுவதாக அறிவித்துள்ளார். அதேபோல டிரிபிள் ஜம்ப் உலக சாம்பியனான பிலிப்ஸ் இடோவுவும் விலகியுள்ளார். போட்டிஏற்பாடுகள் அதிருப்தி அளிப்பதாக கூறி அவர் விலகியுள்ளார்.
ஏற்கனவே உசேன் போல்ட், டேவிட் ருடிஷா உள்ளிட்ட பல வீரர், வீராங்கனைகள் காமன்வெல்த் போட்டியில் பங்கேற்காத நிலையில் தற்போது மேலும் பல வீரர், வீராங்கனைகள் விலகியுள்ளது போட்டிக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
நியூசிலாந்து விலகுமா?
இதற்கிடையே, தனது வீரர்களை டெல்லிக்கு அனுப்பி வைப்பது குறித்து நியூசிலாந்து நாடு மறு பரிசீலனை செய்யவுள்ளதாம். இதுகுறித்து வெள்ளிக்கிழமை இறுதி முடிவு எடுக்கப்படும் என்று அந்த நாட்டு பிரதமர் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு, போட்டி நடைபெறும் இடங்களில் காணப்படும் வசதிக்குறைவுள், குளறுபடிகள், ஊழல்கள் என காமன்வெல்த் போட்டி பெரும் சர்ச்சையாகியிருப்பதே இதற்குக் காரணம் என்கிறது நியூசிலாந்து தரப்பு.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications