4 மாவட்டங்களில் விரைவில் புதிய பயிர் காப்பீட்டுத் திட்டம்: அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம்
தென்காசி: தமிழகத்தில் 4 மாவட்டங்களில் புதிய பயிர் காப்பீ்ட்டுத் திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது என்று குற்றாலத்தில் நடந்த விழாவில் வேளாண்மைத் துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் தெரிவித்தார்.
வேளாண்மைத் துறை சார்பில் குற்றாலத்தில் ரூ.5.92 கோடி செலவில் அமைய உள்ள தோட்டக்கலைத் துறை பூங்கா அடிக்கல் நாட்டு விழா நடந்தது. இதில் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்.
அப்போது அவர் பேசியதாவது,
குற்றாலத்திற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் சாப்பிடவும், குளிக்கவும் மட்டுமே முடியும் என்ற நிலை இருந்தது. தற்போது ரூ.5 கோடியே 92 லட்சம செலவில் தோட்டக்கலை துறை சார்பில் இந்த பழத்தோட்ட பண்ணையில் இருந்து 36.78 ஏக்கர் நிலப்பரப்பில் பூங்காவை உருவாக்கி இருக்கிறோம்.
இந்த நிதி போதாது என்பதால் பாராளுமன்ற உறுப்பினர் தங்கவேலு, லிங்கம் ஆகியோர் தலா ரூ.10 லட்சம் நிதி ஓதுக்கீடு அளிப்பதாக உறுதியளித்துள்ளனர். இந்த பூங்கா திட்டப் பணிகளை 7 மாதத்தில் முடித்து விடுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் 6 மாதத்திலேயே முடித்துத் தருவார்கள் என்று நம்புகிறேன்.
மேலும் வேளாண்மைத் துறையில் நமது நீண்ட நாள் கோரி்க்கையான பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் சில மாற்றங்களை கொண்டுவர மத்திய அரசு சம்மதித்துள்ளது. இதன்படி கடலூர், சிவகங்கை, நாமக்கல் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பரீட்சார்ந்த முறையில் விரைவில் புதிய காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது என்றார் அவர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications