அடிக்கடி தண்டவாள விரிசல்: மதுரை-கன்னியாகுமரி வரை ஆய்வு
நெல்லை: மதுரையில் இருந்து கன்னியாகுமரி வரை தென்னக ரயில்வே பொது மேலாளர் தீபக் கிஷன் தலைமையிலான அதிகாரிகள் குழு நேற்று தண்டவாள உறுதித் தன்மை குறித்து ஆய்வு நடத்தினர்.
தென்னக ரயில்வேயில், இந்தப் பாதையில், சமீப காலமாக அடிக்கடி தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால் ரயில் சேவையில் தாமதம் ஏற்படுவதால் பயணிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். தண்டவாள விரிசலால் பயண பாதுகாப்பில் கேள்விகுறி ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக குமரி-சென்னை வழித்தடத்தில் கார்டுலைன் என்று அழைக்கப்படும் மதுரை, திருச்சி, விருத்தாசலம், விழுப்புரம் பாதையில் அதிகளவில் ரயி்ல்கள் இயக்கப்படுவதால் தான் விரிசல் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. எனவே அத்தகைய தண்டவாளங்களை மாற்ற ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. மேலும் தண்டவாளம் வெயில் மற்றும் மலைக்காலங்களில் சுருங்கி விரியும் தன்மை கொண்டது.
எனவே, விரிசலை உடனுக்குடன் கண்டுபிடிக்க இரவு நேர தண்டவாள ரோந்து பணியை தீவிரப்படுத்தவும் ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. தென்னக ரயில்வே பொது மேலாளர் தீபக் கிஷன் தலைமையிலான அதிகாரிகள் குழு நேற்று மதுரையில் இருந்து குமரி வரை ஆய்வு நடத்தியது. மதுரையில் காலை 9.20 மணிக்கு சிறப்பு ரயிலில் புறப்பட்ட அதிகாரிகள் குழு கோவில்பட்டி, மணியாச்சி உள்ளிட்ட பகுதிகள் ஆய்வு நடத்தியது. தொடர்ந்து நெல்லை வந்த ஆய்வுக் குழுவினர் இங்கு நடந்து வரும் மேம்பாட்டு பணிகளை பார்வையிட்டனர்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications