தனியே இருந்த பெண்ணை கொலை செய்த பெயிண்டருக்கு தூக்கு தண்டனை
சென்னை: பெயிண்ட் அடிக்க வந்த வீட்டில் தனியே இருந்த பெண்ணை கழுத்தை அறுத்துக் கொலை செய்துவிட்டு நகையை கொள்ளையடித்துவிட்டுத் தப்பிய பெயிண்டருக்கு தூக்கு தண்டனை விதித்து நீதிமன்றம் தீ்ர்ப்பளித்துள்ளது.
சென்னை முகப்பேர் வெள்ளாளர் தெருவை சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினீயர் லட்சுமி நாராயணன். இவரது மனைவி ஜெயமாலா (31).
கடந்த 2007ம் ஆண்டு டிசம்பர் 12ம் தேதி இவரது வீட்டில் சென்னை வில்லிவாக்கம் பாரதி நகரைச் சேர்ந்த ஜெயக்குமார் (32) என்பவன் பெயிண்ட் அடித்துக் கொண்டு இருந்தான்.
நாராயணன் வெளியே சென்ற நிலையில் வீட்டில் தனியே இருந்த ஜெயமாலாவை திடீரென்று கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு அவரது கழுத்தில் இருந்த 8 பவுன் தங்க சங்கிலியை கொள்ளையடித்துக் கொண்டு ஜெயக்குமார் தப்பிவிட்டான்.
இவனை திருமங்கலம் போலீசார் 2008ம் ஆண்டு ஜூன் மாதம் 6ம் தேதி கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை பூந்தமல்லி 1வது விரைவு நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கியது.
18 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு, 30 ஆவணங்களும், 9 தடைய சான்றுகளும் தாக்கல் செய்யப்பட்டன. ஜெயக்குமார் கொள்ளையடித்த நகை அடகு கடையில் இருந்து மீட்கப்பட்டது.
இந்த வழக்கில் நீதிபதி தீனதயாளன் இன்று தீர்ப்பளித்தார். அவர் கூறுகையில், ஜெயக்குமார் ஆதாயத்துக்காக பெண்ணை கொலை செய்தது ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டுள்ளதும், மேலும் அவர் கொலை தொடர்பாக தவறான தகவல்களை கூறி கோர்ட்டையே ஏமாற்றியதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
எனவே ஜெயமாலாவை இரக்கமின்றி கொலை செய்த ஜெயக்குமாருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்படுகிறது என்று அறிவித்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications