மு.க. அழகிரி, முதல்வர் கருணாநிதி மீது ஜனாதிபதியிடம் அதிமுக பிரமுகர் மனைவி புகார்
மதுரை: அதிமுக மாநில தொழிற் சங்கத் துணை செயலாளர் பசும்பொன்பாண்டியனின் மனைவி ஜெயலட்சுமி குடியரசுத் தலைவர் பிரதீபா பாடீலுக்கு தந்தி மூலம் புகார் ஒன்றை அனுப்பியுள்ளார்.
அந்த தந்தி மனுவில் அவர் கூறியிருப்பதாவது,
எனது கணவர் பசும்பொன்பாண்டியன் அதிமுக கட்சியில் மாநில தொழிற் சங்கத் துணை செயலாளர்ராக உள்ளார்.
அவர் கடந்த வாரம் ஜெயா டிவி-யில் நேருக்கு நேர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசும் போது, முன்னாள் அமைச்சர் தா.கிருஷ்ணன் கொலை வழக்குத் தொடர்பாக மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மற்றும் தமிழக முதல்வர் கருணாநிதி மீது குற்றம் சாட்டினார்.
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு திமுக பிரமுகர் முத்துப்பாண்டி பெயரில் என் கணவர் தான் கொலை மிரட்டல் விடுத்தார் என்று கூறி எனது கணவர் மீது மதுரை கரிமேடு போலீசார் பொய் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
ஜெயலலிதாவிடம் நல்ல பெயர் எடுத்து மதுரை தொகுதியில் சீட் வாங்க வேண்டும் என்பதற்காக இப்படி செய்தார் என்றும் பொய்யான குற்றச்சாட்டை சுமத்தியுள்ளனர்.
எனது கணவர் பசும்பொன்பாண்டியனை கொலை செய்யும் நோக்ககோடு குண்டர்களையும் ஏவி விட்டுள்ளனர். எனவே, அவர் உயிருக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறிப்பட்டிருந்தது.
இதே போன்ற புகாரை மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்திற்கும் அனுப்பிவைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications