'அயோத்தி': தமிழகத்தில் ஊர்வலம், பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டத்துக்கு தடை

தமிழகத்தில் பதற்றமான பகுதிகளாக கோவை, திருப்பூர், பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், திருச்சி, மதுரை, வேலூர், திண்டுக்கல், தஞ்சை, நாகப்பட்டினம், முத்துப்பேட்டை, ஓசூர், நெல்லை, கன்னியாகுமரி போன்ற இடங்களில் அடையாளம் காணப்பட்டு அங்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மேலும் பதற்றம் தணியும் வரை மாநிலம் முழுவதும் ஊர்வலம், பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம் போன்றவற்றுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் லக்னெள கிளை 61 ஆண்டுகளுக்குப் பின் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு தீர்ப்பு கூறுகிறது.
இது குறித்து சட்டம்- ஒழுங்கு கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறுகையில்,
அயோத்தி பிரச்சனையில் தீர்ப்பு வெளியாவதையொட்டி தமிழகம் முழுவதும் முழு அளவில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யும்படி அரசு அறிவுரை வழங்கியுள்ளது.
அதன் அடிப்படையில் அனைத்து மண்டல ஐ.ஜிக்களுக்கும், அனைத்து சரக டி.ஐ.ஜிக்களுக்கும், அனைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளுக்கும் என்னென்ன பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பது குறித்து உரிய ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட கலெக்டர்களும், போலீஸ் சூப்பிரண்டுகளும், அந்த மாவட்ட மதத் தலைவர்களை அழைத்து பேசியுள்ளனர். தமிழகத்தில் அமைதி நிலவ முழு ஒத்துழைப்பு கொடுப்போம் என்று மதத் தலைவர்கள் உறுதி கொடுத்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் பதற்றமான பகுதிகளும் கண்டறியப்பட்டுள்ளன. பதற்றமான பகுதிகளான கோவை, திருப்பூர், பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், திருச்சி, மதுரை, வேலூர், திண்டுக்கல், தஞ்சை, நாகப்பட்டினம், முத்துப்பேட்டை, ஓசூர், நெல்லை, கன்னியாகுமரி போன்ற இடங்களில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். டி.ஜி.பியின் கட்டுப்பாட்டில் உள்ள 10,000 சிறப்புப் படை போலீசார் பதற்றமான பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.
வன்முறையில் ஈடுபட்டால் மிக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். போலீசாரின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு கொடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
விநாயகர் சிலை ஊர்வலம் அமைதியாக நடந்து முடிந்துள்ளது. அதுபோல, இந்த பிரச்சனையும் எளிதில் சமாளிக்கப்படும். பதற்றம் தணியும் வரை ஊர்வலம், பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கைக்கு பாதிப்பு இல்லாமல் முழு அமைதியை நிலைநாட்டும் வகையில் அனைத்து முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளையும் செய்துள்ளோம் என்றார்.
-
சென்னையில் சம்பவம் இருக்கு.. ஹை அலர்ட் கொடுத்த வானிலை மையம்! உஷார் மக்களே! -
அரசியல் என்ட்ரி? திருச்சி கிழக்கில் போட்டியிடுகிறாரா ராகவா லாரன்ஸ்! வெளியான முக்கிய அறிவிப்பு -
கரண்ட் பில் கட்ட கடைசி தேதி முடிஞ்சுடுச்சா? பதறாதீங்க.. இனிமேல் இப்படி ஒரு வசதி இருக்கு! -
செங்கல்பட்டு-திண்டிவனம் 6 வழிச்சாலை விரிவாக்கம்: NHAI அதிரடி திட்டம் - போக்குவரத்து நெரிசல் ஓவர்! -
ஏமாற்றம் கொடுத்த மேட்டூர்.. கைவிடாத மழை! டெல்டாவுக்கு இன்று கனமழை அலர்ட்! -
முதல்வர் விஜய் டெல்லி போக காரணமே இதுதானே.. உடைத்து பேசிய ஸ்டாலின்! ஸ்டன் ஆன தவெகவினர்! -
சென்னை மக்களே! ரேஷன் அட்டையில் திருத்தம் செய்யணுமா? செம சான்ஸ்.. இன்னைக்கு மிஸ் பண்ணாதீங்க! -
டெல்டாவில் கனமழை.. தஞ்சை, திருவாரூர் மக்கள் உஷார்! அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
கரப்பான் பூச்சி கட்சிக்கு தாவும் Gen-Z! ஏமாந்துவிடக்கூடாதாம்.. உஷார் சொல்லும் வீரமணி! -
தலைமை செயலகத்தில் நெகிழ்ச்சி! சிறுவனை வாரி அணைத்து உணவூட்டிய அமைச்சர் வன்னியரசு.. உருகிய மக்கள் -
18 மணிநேரம் தடையில்லா மின்சாரம்.. விவசாயிகளுக்கு சூப்பர் திட்டத்தை அறிவித்த முதலமைச்சர் விஜய்! -
நீலகிரி டூ கன்னியாகுமரி வரை.. கொட்டி தீர்க்கப்போகும் கனமழை! 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்












Click it and Unblock the Notifications