வெற்றியைக் கொண்டாடுவதில் நிதானம் வேண்டும்-நரேந்திர மோடி
லக்னெள & அகமதாபாத் & டெல்லி: சர்ச்சைக்குரிய இடத்தில் பிரம்மாண்ட ராமர் ஆலயம் எழுப்ப லக்னெள நீதிமன்றத் தீர்ப்பு வழிவகை செய்துள்ளதாக குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
அவர் கூறுகையில், அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் பிரம்மாண்ட ராமர் ஆலயம் எழுப்ப லக்னெள நீதிமன்றம் அளித்துள்ள முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு வழிவகை செய்துள்ளது.
அதே நேரத்தில் இந்த வெற்றியைக் கொண்டாடுவதில் நிதானமாக செயல்பட வேண்டும் என்றார்.
மாயாவதி:
உத்தரப் பிரதேச முதல்வர் மாயாவதி கூறுகையில், லக்னெள நீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்த வேண்டியது மத்திய அரசின் கடமை. சிறிதும் தாமதப்படுத்தாமல் நீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்துமாறு பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடிதம் எழுதி உள்ளேன்.
ராமஜென்ம பூமியில் ஏற்கெனவே 67 ஏக்கர் நிலத்தை மத்திய அரசு கையகப்படுத்தி வைத்துள்ளது. உத்தரப் பிரதேசத்தில் பாதுகாப்புக்கு போதிய அளவில் மத்திய படைகளை அனுப்பவில்லை என்றார்.
கல்யாண் சிங் வரவேற்பு:
உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வரும், பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது பாஜக முதல்வராக இருந்தவருமான கல்யாண் சிங் கூறுகையில்,
இந்தத் தீர்ப்பின் மூலம் கோடிக்கணக்கான இந்துக்களின் நம்பிக்கையை உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
அந்த இடத்தில் பிரமாண்டமான கோயில் கட்டுவதற்கு உதவி செய்ய முஸ்லிம்கள் முன்வர வேண்டும் என்றார்.
பிகார் முதல்வர் நிதீஷ் குமார்:
பிகார் முதல்வர் நிதீஷ் குமார் கூறுகையில், அயோத்தி தீர்ப்பை சம்பந்தப்பட்ட அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும். தீர்ப்பில் அதிருப்தி இருந்தால் அவர்கள் உச்ச நீதிமன்றத்தை நாடலாம்.
இந்தத் தீர்ப்பை ஒரு பிரிவினரின் வெற்றியாகவோ, மற்றொரு பிரிவினரின் தோல்வியாகவோ கருதத் தேவையில்லை என்றார்.
தீர்ப்பு ஆராயப்பட வேண்டும்-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்:
மார்க்சிஸ்ட் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த தீர்ப்பின் தன்மை குறித்து பல்வேறு கேள்விகள் எழுகின்றன. அலகாபாத் நீதிமன்ற தீர்ப்பு முழுமையாக ஆராயப்பட வேண்டும். தீர்ப்பில் உடன்பாடு இல்லாதவர்கள் உச்ச நீதிமன்றம் சென்று இந்தப் பிரச்சனைக்கு முழுமையாக தீர்வு காண முடியும். எனவே அனைத்துத் தரப்பினரும் அமைதியையும் நல்லிணக்கத்தையும் காக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
சிக்கலான விஷயங்கள் உள்ளன-இந்திய கம்யூனிஸ்ட்:
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான ராஜா கூறுகையில், இந்தத் தீர்ப்பில் பல சிக்கலான விஷயங்கள் உள்ளன. எனவே தீர்ப்பு முழுமையாக கூர்ந்து ஆராயப்பட வேண்டும்.
தீர்ப்பில் உடன்பாடு இல்லாதவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய வழியுள்ளது. எனவே இதை வெற்றியாக நினைத்து கொண்டாட வேண்டாம், தோல்வியாக நினைத்து வன்முறையிலும் ஈடுபட வேண்டாம். அமைதியையும், மத நல்லிணக்கத்தையும் காக்க வேண்டியது நம் அனைவரின் கடமை என்று கூறியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications