சிபிஎம் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் மீது தமிழக அமைச்சர் அவதூறு வழக்கு
மதுரை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் மீது தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் அவதூறு வழக்குத் தொடர்ந்துள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு வார இதழில் அளித்த பேட்டியில் திருப்பூர் பனியன் தொழில் அதிபர்கள் திருப்பூர் எம்.எல்.ஏ. கோவிந்தசாமி மூலம் தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் தா.மோ. அன்பரசனுக்கு ரூ. 25 லட்சம் பணம் கொடுத்ததாகக் கூறியிருந்தார்.
இதையடுத்து தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் சார்பில் சென்னை பெருநகர குற்றவியல் அரசு வழக்கறிஞர் ஷாஜகான் முதன்மை செசன்ஸ் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு ஒன்று தொடர்ந்துள்ளார்.
அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது,
தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் மக்கள் மத்தியில் நல்ல பெயர் எடுத்த அமைச்சர் ஆவார். அவர் கடந்த 20 ஆண்டு காலமாக பொது சேவையில் உள்ளார். மேலும், தமிழக முதலமைச்சர் கருணாநிதியால் பாராட்டப்பட்டவர்.
இந்த நிலையில் தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் தா.மோ. அன்பரசனின் புகழுக்கும், பெயருக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் அவதூறு குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.
இதனால் இதற்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், ரூ.1 கோடி நஷ்டஈடு தர வேண்டும் என்றும் கோரி நோட்டீஸ் அனுப்பினோம். இதற்கு அவர் சரியான பதில் தரவில்லை.
எனவே, ராமகிருஷ்ணன் மீது இந்திய குற்றவியல் தண்டனை சட்டம் பிரிவு 500-ன்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் .
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications