மதுரை, நாகர்கோவில், செங்கோட்டைக்கு கூடுதல் சிறப்பு ரயில்கள்

நெல்லை, நாகர்கோவில், தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டன. ஆனால், அந்த ரயில்களிலும் முன்பதிவு முடிந்துவிட்டதால் தற்போது கூடுதலாக சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
சென்னை எழும்பூர்- நாகர்கோவில் சிறப்பு ரயில் (எண்-0617) எழும்பூரில் இருந்து நவம்பர் 4ம் தேதி இரவு 8.20 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் (5ம் தேதி) காலை 11.00 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும்.
நாகர்கோவில்- சென்னை எழும்பூர் சிறப்பு ரயில் (எண்-0618), நாகர்கோவிலில் இருந்து நவம்பர் 5ம் தேதி பிற்பகல் 1.30 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் (6ம் தேதி) அதிகாலை 4.25 மணிக்கு எழும்பூர் வந்தடையும்.
சென்னை எழும்பூர்- செங்கோட்டை சிறப்பு விரைவு ரயில் (எண்-0609) எழும்பூரில் இருந்து 6ம் தேதி இரவு 8.20 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் (7ம் தேதி) காலை 10.20 மணிக்கு செங்கோட்டை சென்றடையும்.
செங்கோட்டை- சென்னை எழும்பூர் சிறப்பு விரைவு ரயில் (எண்-0610) செங்கோட்டையிலிருந்து நவம்பர் 7ம் தேதி மாலை 5 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் (8ம் தேதி) காலை 7.20 மணிக்கு எழும்பூர் வந்தடையும்.
இந்த இரு ரயில்களும் தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், , சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், திருத்தங்கல், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சங்கரன்கோவில், பாம்புகோவில், கடைய நல்லூர், தென்காசி வழியாக இயக்கப்படும்.
மதுரை- சென்னை எழும்பூர் சிறப்பு ரயில் (எண்-0606 ஏ) மதுரையிலிருந்து நவம்பர் 3ம் தேதி மாலை 6 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் (4ம தேதி) அதிகாலை 4.25 மணிக்கு எழும்பூர் வந்தடையும்.
இந்த ரயில்களுக்கான முன் பதிவு இன்று முதல் தொடங்கியது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications