பணி நிரந்தரம் கோரி டாஸ்மாக் பணியாளர்கள் 21-ம் தேதி ஆர்ப்பாட்டம்!
சென்னை: தங்களை நிரந்தரமாக்கக் கோரி டாஸ்மாக் பணியாளர்கள் வரும் அக்டோபர் 21-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர்.
தொழிற்சங்க அமைப்புகளின் கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் சென்னையில் நடந்தது. இதில் அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் ஆர்.சின்னசாமி எம்.எல்.ஏ., அண்ணா தொழிற்சங்க பேரவை தலைவர் தா.பிச்சப்பா, பி.எஸ்.சௌந்தர பாண்டியன், டி.தனசேகரன் (ஏ.ஐ.டி.யு.சி.), திருச்செல்வன் எஸ்.ஜெயபிரகாசன் (சி.ஐ.டி.யு.), சிவா (பாட்டாளி தொழிற்சங்கம்) உள்பட பலர் பங்கேற்று ஆலோசித்தனர்.
கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அவர்கள் கூறியதாவது:
கடந்த ஆகஸ்டு 11-ந்தேதி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட டாஸ்மாக் ஊழியர்களை பழிவாங்கும் வகையில், கடையில் இருந்து குடோன்களுக்கும், மாவட்ட அலுவலகத்திறகும் நிர்வாகம் மாற்றி உள்ளது.
டாஸ்மாக் ஊழியர்களுக்கு அரசு அறிவித்த ஊதிய உயர்வு மனநிறைவு அளிக்கவில்லை. கடந்த 7 ஆண்டாக பணியாற்றி வரும் டாஸ்மாக் ஊழியர்களின் பிரதான கோரிக்கையான பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும்.
வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட ஊழியர்கள்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை ரத்து செய்து வழக்குகளை வாபஸ் பெற வேண்டும். தொழிற்சங்கங்களை அழைத்து பேசி ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க அமைப்புகளின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் வருகிற 12-ந்தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். இதில் திரளான ஊழியர்கள் பங்கேற்பார்கள்.
-
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்?












Click it and Unblock the Notifications