டெலல்லி காமன்வெல்த் போட்டிக்கு தீவிரவாத அச்சுறுத்தல் இல்லை-ப.சிதம்பரம்
டெல்லி: காமன்வெல்த் போட்டிக்கு தீவிரவாத அச்சுறுத்தல் எதுவும் இல்லை. எனவே அதுகுறித்து மக்கள் அச்சப்படத் தேவையில்லை. போட்டியை சந்தோஷமாக பார்த்து ரசிக்கலாம் என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
பாகிஸ்தானிலிருந்து செயல்படும் பயங்கரவாத அமைப்பு (பிரிகேட் 313) மற்றும் இலியாஸ் காஷ்மீரி ஆகிய பயங்கரவாத அமைப்புகள் தாக்குதல் நடத்தக் கூடும் என செய்திகள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து கவலைப்படத் தேவையில்லை. பத்திரிகையாளர்கள் விளையாட்டுப் போட்டியில் கவனம் செலுத்தினால் நன்றாக இருக்கும். போட்டிகளை கண்டு ரசியுங்கள்.
காமன்வெல்த் போட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பிரதமர் அடிக்கடி ஆய்வு செய்து வருகிறார். ஏற்கெனவே 5 ஆயிரம் மத்திய துணை ராணுவப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். எனவே எந்தவித அச்சத்திற்கும் அவசியம் இல்லை என்றார் சிதம்பரம்.
காஷ்மீர் பிரச்சினை குறித்து கேட்ட கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், அனைத்து தரப்பினருடனும் மத்திய அரசு விரைவில் பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. ஆனால் இதற்கு எவ்வித கால வரையறை நிர்ணயிக்கப்படவில்லை.
கடந்த மாதம் 21 மற்றும் 22-ம் தேதிகளில் அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் குழு காஷ்மீரில் சுற்றுப் பயணம் மேற்கொண்டது. அங்கு நிலவும் சூழல் குறித்து பிரதமருக்கு அறிக்கை அளிக்க உள்ளேன்.
காஷ்மீருக்கு அளித்துள்ள 8 அம்ச பரிந்துரைகள் குறித்தும் அமைச்சரவை கூட்டத்தில் ஆராயப்பட்டது. நடுநிலையாளர்களைக் கொண்ட குழு அமைத்து அனைத்து தரப்பினருடனும் பேச்சு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இதற்கான காலம் வரையறுக்கப்படவில்லை என்றார் சிதம்பரம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications