சட்ட மேலவைத் தேர்தல் வாக்காளர் பட்டியல்-பட்டதாரிகள், ஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக சட்ட மேலவைத் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலில் தகுதி உடைய பட்டதாரிகள் மற்றும் ஆசிரியர்கள் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம் என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு மேல்சபை தேர்தலுக்கு பட்டதாரி தொகுதிகள், ஆசிரியர் தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியலில் பெயரைச் சேர்க்க 1960-ம் ஆண்டின் வாக்காளர் பதிவு விதிகளின்படி, தகுதியுள்ள ஒவ்வொரு வாக்காளரும் தங்கள் பெயரைச் சேர்க்க விண்ணப்பிக்க வேண்டும்.

1.11.2010-ஐ தகுதி நாளாகக் கொண்டு பட்டதாரி தொகுதிக்கு படிவம்-18-ஐ, ஆசிரியர் தொகுதிக்கு படிவம் 19-ஐ பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும்.

விண்ணப்ப படிவங்களை சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அதிகாரி, உதவி வாக்காளர் பதிவு அதிகாரி அல்லது நிர்ணயிக்கப்பட்ட அதிகாரியிடம் அளிக்கலாம். மாநகராட்சி பகுதிகளில் மண்டல உதவி ஆணையாளர்களும், இதர பகுதிகளில் தாலுகா அலுவலகங்களில் தாசில்தார் மற்றும் துணை தாசில்தார்களும் விண்ணப்பத்தை பெற்றுக்கொள்வார்கள்.

தமிழ்நாடு மாநில தலைமை தேர்தல் அதிகாரி அலுவலக இணையதளத்திலும் (http://www.elections.tn.gov.in/) விண்ணப்பங்களை டவுண்லோடு செய்து பயன்படுத்தலாம். வாக்காளர்களுக்கான தகுதிகள், தொகுதி பட்டியல் ஆகிய விவரங்களையும் இந்த இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். பெயர் சேர்க்கக் கோரி கோரி நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ மொத்தமாக வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

பட்டதாரி தொகுதிகளைப் பொறுத்தவரையில், ஒரு குடும்பத்தில் உள்ள உறுப்பினர் இதர உறுப்பினர்களுக்கும் சேர்த்து விண்ணப்பம் கொடுக்கலாம். இதற்கு தங்கள் குடும்ப உறுப்பினர்களின் அசல் கல்விச் சான்றிதழ் ஆவணங்களை காண்பிக்க வேண்டும்.

ஆசிரியர் தொகுதியைப் பொறுத்தமட்டில், சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தின் தலைவர் அந்த நிறுவனத்தில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு சேர்த்து உரிய சான்றிதழ்களுடன் விண்ணப்பம் கொடுக்கலாம். பட்டதாரி, ஆசிரியர் தொகுதிகளுக்கான வாக்காளர் பெயர் சேர்ப்புக்கு அக்டோபர் 1-ந் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்.

பூர்த்தி செய்த விண்ணப்பங்களை பெற கடைசி நாள் நவம்பர் 6-ந் தேதி ஆகும். வரைவு வாக்காளர் பட்டியல் நவம்பர் 22-ந் தேதி வெளியிடப்படும். வரைவு வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்வதற்கு கடைசி நாள் டிசம்பர் 7-ந் தேதி ஆகும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எப்போது தேர்தல்?

தமிழக மேல்சபைக்கு அனேகமாக அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் தேர்தல் நடைபெறலாம் என்று தெரிகிறது. சட்டசபைக்கு அடுத்த ஆண்டு ஏப்ரல், மாதத்திற்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டியுள்ளது. எனவே அதற்கு முன்பாக கவுன்சிலுக்கு தேர்தல் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அனேகமாக பிப்ரவரியில் தேர்தல் நடைபெறலாம். தப்பினால் மார்ச்சில் நடத்தப்படும் என்று தெரிகிறது.

இந்தத் தேர்தல் வாக்குச் சீட்டு முறையில்தான் நடத்தப்படும் என்று பிரவீன் குமார் கூறியுள்ளார்.

சென்னைக்கு 2 ஓட்டு

சென்னையைப் பொறுத்தவரை (அதாவது மாநகராட்சி எல்லைக்குள்) மாநகராட்சி கவுன்சிலர்கள் 2 ஓட்டுப் போட்டு வாக்களிக்க வேண்டும். காரணம், சென்னையில் 2 எம்.எல்.சிக்கள் தேர்வு செய்யப்பட வேண்டும் என்பதால்.

சென்னை மாநகராட்சியில் 155 வார்டுகள் உள்ளன. இதில் இருந்து 2 பேர் எம்.எல்.சி. ஆக தேர்வாக முடியும். 52 கவுன்சிலர்களின் ஆதரவு இருந்தால்தான் எம்.எல்.சி. பதவி பெற முடியும்.

2 பேரை தேர்வு செய்ய வேண்டும் என்பதால் சென்னை மாநகராட்சி கவுன்சிலர்கள் மட்டும் 2 ஓட்டுக்கள் போட வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+