முட்டம் கடலில் மூழ்கி சென்னை வாலிபர் பலி-2 பேர் மாயம்
குளச்சல் : சென்னையைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் கன்னியாகுமரி மாவட்டம் முட்டம் கடல் பகுதியில் மூழ்கி பலியானார். மேலும் 2 பேரைக் காணவில்லை.
சென்னையில் தனியார் ஏர் கண்டிஷன் ஆலையில் ஏசி மெக்கானிக்காக பணிபுரிந்த சென்னை மாங்காடு ஹரிதாஸ், அண்ணா அறிவாலயம் பகுதியை சேர்ந்த சம்பத் மகன் கார்த்திக், ஆழ்வார்பேட்டை ரமேஷ், பெரம்பூர் முகமது கவுஸ் மகன் முகமது நயித், முகமது சபீத் மகன் முகமது நயீன், மற்றும் சென்னை பம்மல் ஜீவமணி மகன் அருண்குமார் ஆகியோர் நேற்று முன்தினம் கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்தனர். நேற்று மாலை முட்டம் கடற்கரைக்கு சென்றனர்.
அப்போது கடலில் எழுந்த ராட்சத அலை கார்த்திக் என்பவரை இழுத்து சென்றது. உடனே ஹரிதாஸ், ரமேஷ் ஆகியோர் கடலில் குதித்து கார்த்திக்கை காப்பாற்ற முயன்றனர். இதில் அவர்களும் அலையின் சிக்கினர். 3 பேரையும் அலை இழுத்து சென்றது.
சில மணி நேரம் கழித்து ஹரிதாஸ் உடல் அப்பகுதியில் கரை ஓதுங்கியது. தகவல் அறிந்த மீனவர்கள் மாயமான இளைஞர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் ரமேஷ், கார்த்திக் ஆகியோரது கதி என்ன என்று தெரியவில்லை. அவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
வெள்ளி சந்தை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications