அக். 6ல் தமிழகம், புதுச்சேரியில் வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு
சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அக்டோபர் 6ம் தேதி வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்புப் போராட்டத்தை நடத்தவுள்ளனர்.
தமிழ்நாடு-புதுச்சேரி வக்கீல்கள் சங்கங்களின் கூட்டமைப்பு பொதுக்குழு கூட்டம் சேலத்தில் நடந்தது. கூட்டமைப்பின் தலைவர் பரமசிவன் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில், வக்கீல்கள் சேமநல நிதியை ரூ.5 லட்சமாக உயர்த்தி கொடுக்கும் வகையில் தமிழக அரசு சட்டதிருத்தம் கொண்டுவர வேண்டும்.
ஆசிரியர்களுக்கும், பட்டதாரிகளுக்கும் தமிழக அரசின் மேல்சபையில் சீட் ஒதுக்குவதுபோல தமிழக வக்கீல்கள் சார்பிலும் ஒரு உறுப்பினரை ஆளுனர் நியமனம் செய்ய வேண்டும்.
மாவட்ட நீதிமன்றங்களில் காலியாக உள்ள பணியிடங்களில் நீதிபதிகளை நியமிக்க உயர்நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை ஆட்சி மொழியாக கொண்டுவர மத்திய அரசும், உச்சநீதிமன்றமும் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புதிதாக பதிவு செய்த இளம் வக்கீல்களுக்கு உதவித்தொகையாக மாதம் ரூ.3 ஆயிரத்தை முதல் 3 ஆண்டுகளுக்கு மத்திய-மாநில அரசுகள் இணைந்து வழங்க வேண்டும்.
நீதிமன்ற வளாகத்தில் உள்ள வக்கீல்கள் சங்கங்களின் மின்கட்டணத்தை நீதிமன்ற மின்கட்டணத்துடன் சேர்த்து நீதித்துறையே எப்போதும்போல செலுத்த வேண்டுவது உள்ளிட்ட 9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி அக்டோபர் 6ம் தேதி ஒரு நாள் கோர்ட் புறக்கணிப்புப் போராட்டம் நடத்த முடிவு செய்து தீர்மானம் நிறைவேற்றினர்..
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications