வாக்குப் பதிவு எந்திர சர்ச்சை-டெல்லியில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்கள் குறித்த சர்ச்சை, தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகள் பணம் கொடுத்து மீடியாக்களில் தங்களுக்கு சாதகமான செய்திகள், கருத்துக் கணிப்புகளை வெளியிடுவது உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து ஆலோசிக்க இன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தை தலைமைத் தேர்தல் ஆணையம் கூட்டியுள்ளது.

தேர்தலில் மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்களை பயன்படுத்த பல்வேறு கட்சிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

அதன் நம்பகத்தன்மை நிரூபிக்கப்பட்டுவிட்ட போதிலும், தொடர்ந்து தோல்வியை சந்துத்து வரும் சில கட்சிகள் அது குறித்து சந்தேகங்கள் எழுப்பி வருகின்றன.

மேலும் தேர்தலில் பணபலம் ஆதிக்கம் செலுத்துவது குறித்தும், பத்திரிக்கைகளுக்கு பணம் தந்து தங்களுக்கு ஆதரவான செய்திகளை வெளியிடுவது குறித்தும் தேர்தல் ஆணையம் கவலை தெரிவித்துள்ளது.

2009ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தல், மகாராஷ்ட்ரம், ஆந்திரா, உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களி்ல் நடந்த சட்டப் பேரவைத் தேர்தல்களின்போது இந்த 'கட்டணச் செய்தி'கள் குறித்து பற்றி பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியாவில் பல புகார்கள் பதிவாயின.

இந்த முறைகேட்டை தடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு பிரஸ் கவுன்சில் பரிந்துரை செய்துள்ளது.

இந் நிலையில் பிகார் சட்டப் பேரவைத் தேர்தல் வரும் 21ம் தேதி தொடங்கி நவம்பர் 20 வரை ஐந்து கட்டமாக நடக்கிறது. இந்தத் தேர்தலை நியாயமாக நடத்துவது, மின்னணு வாக்குப் பதிவு சர்ச்சை, தேர்தலில் பணபலம், கட்டண செய்திகள் விவகாரம் ஆகியவை குறித்து ஆலோசிக்க இன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தை டெல்லியில் தேர்தல் கமிஷன் கூட்டியுள்ளது.

இதில் கலந்து கொள்ளுமாறு 6 தேசிய கட்சிகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட 50க்கும் மேற்பட்ட மாநில கட்சிகளுக்கு தேர்தல் கமிஷன் அழைப்பு அனுப்பியுள்ளது.

தலைமைத் தேர்தல் கமிஷனர் எஸ்.ஒய். குரேஷி, கமிஷனர்கள் வி.எஸ்.சம்பத், மற்றும் எச்.எஸ். பிரம்மா ஆகியோர் தலைமையில் இக் கூட்டம் நடக்கிறது.

பிகார் தேர்தல்-ராப்ரிதேவி 2 இடங்களில் போட்டி:

இதற்கிடையே பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் ராஷ்ட்ரீய ஜனதாதளத் தலைவர் லாலு பிரசாதின் மனைவியும் முன்னாள் முதல்வருமான ராப்ரி தேவி 2 இடங்களில் போட்டியிடுகிறார்.

3 மற்றும் 4ம் கட்டத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை லாலு பிரசாத் வெளியிட்டார். அதில் ராப்ரி தேவி ரஹோபூரிலும், சோன்பூரிலும் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+