சென்செக்ஸ் 187 புள்ளி உயர்ந்தது
மும்பை-மும்பை பங்கு சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்றைய வர்த்தகத்தில் 187 புள்ளிகள் உயர்ந்தது.
பொருளாதார மீட்சி மற்றும் ஐடி துறை வளர்ச்சி காரணமாக சமீபகாலமாக ஏறுமுகம் கண்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக இன்று சென்செக்ஸ் 187 புள்ளிகள் உயர்ந்தது.வெளிநாட்டு நிதி நிறுவனங்கள் இந்திய பங்குகளில் அதிக முதலீடு செய்ததையடுத்து சென்செக்ஸ் உயர்ந்தது.
இன்றைய வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 20632 புள்ளிகளைத் தொட்டது. இதேபோல தேசிய பங்கு சந்தையில் நிப்டி 58 புள்ளிகள் உயர்ந்து 6,201 புள்ளிகளைத் தொட்டு நிலைபெற்றது.
மகிந்திரா அண்ட் மகிந்திரா, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், டாடா மோட்டார்ஸ் மற்றும் ஐசிஐசிஐ வங்கி போன்ற நிறுவனப் பங்குகள் இன்று நல்ல உயர்வு கண்டன.
சந்தை நிலை சாதகமான போக்கில் இருந்தாலும், இன்போஸிஸ், ஜிசி, பார்தி ஏர்டெல், எல் அண்ட் டி போன்றவற்றின் பங்குகள் நஷ்டத்தில் கைமாறியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications