நெல்லை-9 வயது சிறுமியை கற்பழித்துக் கொன்று ஆற்றில் வீசிய கயவர்கள்
நெல்லை கொக்கிரகுளம் அம்மன் கோவில் தெருவை சேர்ந்த கட்டிட தொழிலாளி சுப்பிரமணியன். இவரது முதல் மனைவிக்கு குழந்தை இல்லை. இதனால் சுப்பிரமணியன் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் அதே பகுதியை சேர்ந்த கலாவை இரண்டாவதாக திருமணம் செய்தார். இவர்களது மகள் முருகம்மாள். அருகிலுள்ள தனியார் பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வந்தாள்.
நேற்று முன்தினம் காலை சுப்பிரமணியன் வேலைக்கும், கலா ஆடு மேய்க்கவும் சென்று விட்டனர். முருகம்மாள் பக்கத்து வீட்டு குழந்தைகளுடன் மாலை 3 மணி வரை தெருவில் விளையாடி கொண்டிருந்தாள். அதன் பிறகு அவள் மாயமானாள். மாலை 5 மணிக்கு வீடு திரும்பிய அவரது பெற்றோர் மகளை காணாததால் அக்கம்பக்கத்திலும், உறவினர்கள் வீடுகளிலும் தேடினர். ஆனால் கிடைக்கவில்லை.
இதுகுறித்து பாளையங்கோட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிந்து தேடி வந்தனர். இந்நிலையி்ல் நேற்று காலை கொக்கிரகுளம் தாமிரபரணி ஆற்று கரையோரம் ஒரு சாக்கு மூடை ஓதுங்கியது.
அங்கு குளித்து கொண்டிருந்த சிலர் அதை பிரித்து பார்த்தபோது ஒரு சிறுமியின் உடல் போர்வையில் சுற்றி வைக்கப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். விசாரணையில் சாக்கு மூடைக்குள் இறந்த நிலையில் இருந்தது காணாமல் போன சிறுமி முருகம்மாள் என்பது தெரிய வந்தது.
சிறுமியின் தொடை, மார்பு பகுதியில் காயங்கள் இருந்ததால் அவரை பலாத்காரம் செய்து கழுத்தை நெறித்து கொன்று உடலை போர்வையில் சுற்றி சாக்குமூடையில் கட்டி ஆற்றில் வீசியது கண்டுபிடிக்கப்பட்டது.
மகள் கொடூரமாக கொலை செய்யப்பட்டதை அறிந்த சுப்பிரமணியன், கலா மற்றும் உறவினர்கள் முருகம்மாளின் உடலை பார்த்து கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி













Click it and Unblock the Notifications