புலிகள் மீதான தடை-தீர்ப்பாயம் சென்னையில் இன்று விசாரணை

இதில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் மற்றும் தமிழர் அமைப்புகள் கலந்து கொண்டு தடைக்கு எதிராக தங்கள் கருத்துக்களை பதிவு செய்தனர்.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை செய்யப்பட்ட பிறகு விடுதலைப் புலிகள் அமைப்புக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை மத்திய அரசு இந்தத் தடையை நீடித்து வருகிறது.
கடந்த மே மாதம் 14ம் தேதி இந்தத் தடை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டது.
மத்திய உள்துறை அமைச்சகம் பிறப்பித்த இந்த உத்தரவை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்ற தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நீதிபதி விக்ரமஜித் சென் தலைமையிலான ஒரு நபர் தீர்ப்பாயம் இந்த மனுவை விசாரித்து வருகிறது.
இந்த வழக்கில் தன்னையும் ஒருதரப்பாக சேர்த்துக் கொள்ளக் கோரி வைகோ விண்ணப்பம் செய்தார். ஆனால், அந்தக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டவிட்டது.
இந் நிலையில் இந்த வழக்கின் விசாரணை இன்று சென்னையில் நடந்தது.
இதில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் மற்றும் தமிழர் அமைப்புகள் கலந்து கொண்டு, தங்கள் கருத்துக்களை கூறினர்.
இதில் பங்கேற்ற தமிழக போலீசார், கடந்த ஆண்டுகளில் விடுதலைப் புலிகள் அமைப்பு தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகள் தொடர்பான ஆவணங்களை சமர்ப்பித்தனர்.
இந்த விசாரணை வரும் 20ம் தேதி ஊட்டியில் நடக்கிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications