சோதனைக் குழாய் குழந்தை முறையைக் கண்டுபிடித்த விஞ்ஞானிக்கு நோபல் பரிசு

இன் விட்ரோ பெர்டிலைசேஷன் எனப்படும் ஐவிஎப் முறையைத்தான் சுருக்கமாக சோதனைக் குழாய் குழந்தை என்கிறோம். இந்த முறையை பயன்படுத்தி உலகின் முதலாவது சோதனைக் குழாய் குழந்தை 1978ம் ஆண்டு ஜூலை மாதம் இங்கிலாந்தில் பிறந்தது. அக்குழந்தைக்கு லூயிஸ் பிரவுன் என பெயரிடப்பட்டது.
இந்த மிகப் பெரிய கண்டுபிடிப்பின் பின்னணியில் இருந்தவர் ராபர்ட் எட்வர்ட்ஸ். இன்று கோடானு கோடி பேருக்கு இந்த சோதனைக் குழாய் குழந்தை முறை மிகப் பெரிய வரப் பிரசாதமாக உள்ளது. 1978ம் ஆண்டுக்குப் பிறகு இன்று வரை 30 லட்சத்திற்கும் மேற்பட்ட சோதனைக் குழாய் குழந்தைகள் பிறந்து விட்டன. இன்று ஐந்தில் ஒருவருக்கு வெற்றிகரமாக குழந்தை கிடைக்கும் என்ற நிலைக்கு சோதனைக் குழாய் குழந்தை முறை முன்னேறியுள்ளது.
தற்போது 85 வயதாகும் ராபர்ட்எட்வர்ட்ஸ் மனித குலத்துக்குப் பெரும் வரமாக அமைந்துள்ள சோதனைக் குழாய் குழந்தை முறையைக் கண்டுபிடித்தமைக்காக மருத்துவத்திற்கான நோபல் பரிசுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் தற்போது பணியாற்றி வருகிறார் ராபர்ட்.
50களிலேயே சோதனைக் குழாய் குழந்தை முறை தொடர்பான ஆய்வுகளை தொடங்கினார் ராபர்ட். பெண்ணின் கருமுட்டைகளை வெளியில் எடுத்து, சோதனைக் குழாயில் வைத்து, ஆணின் வி்ந்தனுவுடன் சேர்த்து அதை கருத்தரிக்கச் செய்து பின்னர் கருப்பைக்குள் செலுத்தும் முறைதான் இந்த சோதனைக் குழாய் குழந்தை தொழில்நுட்பம்.
ராபர்ட்டுடன் சேர்ந்து இந்த ஆய்வு மற்றும் கருத்தரிப்பில் ஈடுபட்டவர் பாட்ரிக் ஸ்டெப்டோ. இவர் 1988ம் ஆண்டு இறந்து விட்டார்.
உலகம் முழுவதும் மலட்டுத்தன்மை, கருத்தரிக்க இயலாத சூழ்நிலை ஆகியவற்றால் பெரும் பாதிப்பை சந்திக்கும் மனித குலத்துக்கு மிகப் பெரிய வரப் பிரசாதம் ராபர்ட்டின் கண்டுபிடிப்பு என நோபல் பரிசுக் கமிட்டி தெரிவித்துள்ளது.
இந்தியாவின் துரதிர்ஷ்டம்
உலகின் 2வது சோதனைக் குழாய் குழந்தை இந்தியாவின் கொல்கத்தாவில் அதே 1978ம் ஆண்டு பிறந்தது. இதை நமது நாட்டு விஞ்ஞானியான டாக்டர் சுபாஷ் முகோபாத்யாயா உருவாக்கி சாதனை படைத்தார்.
ஆனால் இதை போலியானது என்று மேற்கத்திய விஞ்ஞானிகள் ஒரே வார்த்தையில் கூறி விட்டனர். இதனால் மனம் உடைந்த டாக்டர் முகோபாத்யாயா 1981ம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஆனால் டாக்டர் சுபாஷின் இந்த சோதனைக் குழாய் குழந்தை சரியான முறையில், உருவாக்கப்பட்டதுதான் என்று பின்னர் விஞ்ஞானிகள் ஒப்புக் கொண்டனர் என்பது நினைவிருக்கலாம்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications