இலவச தொலைக்காட்சி பெட்டிகள்-மேலும் 10 லட்சம் டி.விக்கள் கொள்முதல்
சென்னை: பொது மக்களுக்கு வழங்க 10 லட்சம் இலவச டி.விக்களை வாங்க முதல்வர் கருணாநிதி தலைமையில் நடந்த சட்டமன்றக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,
2006ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலையொட்டி திமுக அளித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வண்ணம் இதுவரை ஐந்து கட்டங்களில் 3492 கோடியே 72 லட்சம் ரூபாய்ச் செலவில் 1 கோடியே 52 லட்சத்து 80 ஆயிரம் இலவச டி.விக்கள் கொள்முதல் செய்யப்பட்டு;
1 கோடியே 40 லட்சத்து 84 ஆயிரத்து 922 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. எஞ்சிய கலர் டி.வி.க்கள் வழங்கும் பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளன.
இந்நிலையில், சில மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தங்கள் மாவட்டங்களுக்கு கூடுதல் கலர் டி.விக்கள் தேவைப்படுவதாகக் கோரிக்கைகள் அளித்துள்ளதைத் தொடர்ந்து, அந்தக் கோரிக்கைகள் குறித்து முடிவு செய்திட முதல்வர் கருணாநிதி தலைமையிலான சட்டமன்றக் கட்சிகளின் பிரதிநிதிகள் குழுவின் கூட்டம் புனித ஜார்ஜ் கோட்டையில் நடை பெற்றது.
இதில் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், சட்டமன்றக் கட்சிகளின் பிரதிநிதிகள் யசோதா (காங்கிரஸ்), சிவபுண்ணியம் (இந்திய கம்யூனிஸ்ட்), அப்துல் பாசித், (இந்திய யூனியன் முஸ்லீம் லீக்), ஜெகன் மூர்த்தி (புரட்சி பாரதம்), ரவிக்குமார் (விடுதலை சிறுத்தைகள்) ஆகியோர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில், நடப்பு நிதியாண்டில் 40 லட்சம் கலர் டி.விக்களைக் கொள்முதல் செய்திட பிறப்பிக்கப்பட்ட ஆணையின்படி, தமிழ்நாடு ஒளிவுமறைவற்ற ஒப்பந்தப்புள்ளிகள் சட்டத்தின் அடிப்படையிலேயே மறு ஒப்பந்தப்புள்ளி கோராமல் 25 சதவீதம் வரை, அதாவது 10 லட்சம் கலர் டி.விக்களைக் கூடுதலாக கொள்முதல் செய்வது என்றும்,
அவற்றின் விநியோகப் பணிகளை 2011 ஜனவரி மாத இறுதிக்குள் பூர்த்தி செய்திட வேண்டுமென்றும் முடிவுகள் எடுக்கப்பட்டன என்று கூறப்பட்டுள்ளது..
-
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
ரேசன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! வீடு தேடி வரும் ரேசன் பொருள்! இந்த மாதம் எப்போது வரும்? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications