பெங்களூர் பிபிஓ ஊழியை பிரதீபா கற்பழிப்பு-கொலை வழக்கு-குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

சில தினங்களுக்கு முன்புதான் சிவக்குமார் குற்றவாளி என பெங்களூர் கோர்ட் அறிவித்திருந்தது. இன்று தண்டனை அறிவிக்கப்பட்டது.
கடந்த 2005ம் ஆண்டு டிசம்பரம் மாதம் இரவுப் பணியை முடித்து விட்டு பிரதீபா, தனது நிறுவனம் வழங்கிய வாடகை காரில் வீட்டுக்குப் பயணித்தார். ஆனால் அந்த காரை செலுத்தி சிவக்குமார், பிரதீபாவை கடத்திச் சென்று கற்பழித்துக் கொடூரமாகக் கொலை செய்து உடலை பெங்களூர் புறநகர்ப் பகுதியில் போட்டு விட்டுத் தப்பினார். அடுத்த நாள் உடல் கைப்பற்றப்பட்டது. பின்னர் தீவிர தேடுதல் வேட்டையில் சிவக்குமார் சிக்கினார்.
பிரதீபாவின் கொலை நாடு முழுவதும் பிபிஓ நிறுவனங்களிப் பணியாற்றும் பெண் ஊழியர்களின் பாதுகாப்பு குறித்து பெரும் கேள்விக்குறிகளையும், விழிப்புணர்வையும் ஏற்படுத்தியது. பிரதீபா மரணத்தைத் தொடர்நதே பிபிஓ மற்றும் பிற கம்ப்யூட்டர் நிறுவனங்களில் பெண் ஊழியர்களின் பாதுகாப்பு குறித்து பல்வேறு நடவடிக்கைகள் எடுக்க காரணமாக இருந்தது.
விரைவு நீதிமன்ற நீதிபதி சிவக்குமாருக்கு தண்டனை விதித்ததும், அதைக் கேட்டு கோர்ட்டில் இருந்த பிரதீபாவின் 80 வயது தாயார் கெளரம்மா கதறி அழுதார்.
பின்னர் வெளியில் வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்த கயவனுக்கு தூக்குத் தண்டனை கொடுத்திருக்க வேண்டும். ஆனால் ஆயுள் தண்டனை கொடுத்துள்ளனர். இந்த தண்டனை எனது மகளின் ஆன்மாவை சாந்திப்படுத்தினால் போதும்.
எனது மகள் இறந்த நாள் முதல் எனக்கு அமைதி இல்லை. ஒரு நாள் கூட அவளை நினைக்காமல் என்னால் இருக்க முடியவில்லை, சாப்பிட முடியவில்லை. எனது மகளே போய் விட்டாள், எனக்கு எப்படி அமைதி கிடைக்கும்.
யாருக்கும் தீங்கு நினைக்காதவள் எனது மகள். தனது மரணத்திலும் கூட நல்லதைத்தான் செய்துள்ளாள். அவளது மரணத்திற்குப் பிறகுதான் நாடு முழுவதும் கம்ப்யூட்டர் நிறுவனங்களில் பணியாற்றும் பெண்களுக்கு இன்று பாதுகாப்பு கிடைத்துள்ளது. அது எனக்கு மன நிறைவைத் தருகிறது என்றார் கெளரம்மா.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications