நவம்பர் 24-ந் தேதி முதல் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் 3 நாள் ஸ்டிரைக்!

தேசிய தொலை தொடர்பு சம்மேளனத்தின் தேசிய செயற்குழு கூட்டம், ஜலந்தரில் நடந்தது.
இந்த கூட்டத்திற்கு பிறகு, பொதுச் செயலாளர், சந்தோஷ்வர் சிங், துணை பொதுச் செயலாளர் சி.கே. மதிவாணன் ஆகியோர் நிருபர்களிடம் கூறுகையில், "ஒரு நிறுவனம் லாபத்தில் இயங்கினாலும், நஷ்டத்தில் இயங்கினாலும் போனஸ் வழங்க வேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை பி.எஸ்.என்.எல். நிர்வாகம் மீறும் வகையில் செயல்பட்டு வருகிறது. இதைக் கண்டிக்கும் வகையில் வரும் 12-ந் தேதி நாடு முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகிறோம்.
மேலும், பிஎஸ்என்எல் நிறுவனம் தனது 30 சதவீத பங்குகளை தனியாருக்கு விற்க முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஒரு லட்சம் ஊழியர்களை கட்டாய விருப்ப ஓய்வில் நீக்கவும் திட்டமிட்டுள்ளது.
இவற்றை கண்டிக்கும் வகையில் நவம்பர் 24-ந் தேதி முதல் 26-ந் தேதி வரை 3 நாட்கள் நாடுதழுவிய அளவில் வேலை நிறுத்த போராட்டம் நடத்துவது என்று முடிவு செய்து இருக்கிறோம், என்றனர்.












Click it and Unblock the Notifications