டீக்கடையில் மது விற்பனை-டீக்கடைக்காரர் கைது

Subscribe to Oneindia Tamil

சுரண்டை: டீக்கடை வைத்துக் கொண்டு டீ மட்டும் விற்காமல் மது விற்பனையை நடத்தி வந்த நபரை போலீஸார் கைது செய்தனர்.

நெல்லை மாவட்டம் சுரண்டை அருகே உள்ள மேலபட்டாக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகையா. இவரது மகன் கிருஷ்ணன்.

மேல்பட்டாக்குறிச்சி மெயின் ரோட்டில் டீக்கடை நடத்தி வந்தார். ஆனால் டீ விற்பனையை மட்டும் செய்யாமல் ரகசியமாக மது விற்பனையையும் நடத்தி வந்துள்ளார்.

இவரது இந்த கள்ள மது விற்பனை குறித்து போலீஸாருக்குத் தகவல் போனது. இதையடுத்து சாம்பவர் வடகரை சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சவுகத் அலி தலைமையில் போலீஸார் கடையில் ரெய்டு நடத்தினர்.

அப்போது கடையில் வைக்கப்பட்டிருந்த 10 மது பாட்டில்கள் சிக்கின. இதையடுத்து டீக்கடையில் மது விற்றதாக கிருஷ்ணனை போலீஸார் கைது செய்தனர். மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+