அக்டோபர் 11ல் கச்சதீவை முற்றுகையிட்டு போராட்டம்-மீனவர்கள் உறுதி

Subscribe to Oneindia Tamil

ராமேஸ்வரம்: அக்டோபர் 11 ம் தேதி கச்சத்தீவை மீ்ட்க வலியுறுத்தி அங்கு படகுகளுடன் சென்று முற்றுகைப் போராட்டம் நடத்துவது உறுதி என்று மீனவர்கள் தீர்மானமாக தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு, புதுவை கடலோர மக்கள் பாதுகாப்பு இயக்கம், அகில இந்திய மீனவர் முன்னணி, தமிழ்நாடு மீனவர் பெடரேஷன் ஆகிய அமைப்புகளின் ஆலோசனைக் கூட்டம், ஈஞ்சம்பாக்கத்தில் நடைபெற்றது.

அப்போது, கூட்டத்தில் தமிழ்நாடு மீனவர் பெடரேஷன் ஆகிய அமைப்புகளின் பின்பு இந்த அமைப்பின் தலைவர் மதியழகன் செய்தியாளர்கள் கூறியதாவது,

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் 500 க்கும் மேற்பட்டோர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 500 பேர் உடல் ஊனமடைந்துள்ளனர்.

தொடர்ந்து தாக்குதல் நடத்தும் இலங்கை கடற்படையை கண்டித்தும் கச்சத்தீவை மீட்கக் கோரியும் வரும் அக்டோபர் 11 ம் தேதி ராமேஸ்வரம் மீனவர்கள் கச்சத்தீவுக்கு 1000 விசைப்படகுகளில் 10 ஆயிரம் மீனவர்கள் சென்று முற்றுகை போராட்டம் நடைபெறும். இதற்கு ஆதரவு தெரிவித்து எங்கள் 3 இயக்கம் சார்பில் 500 பேர் பங்கேற்கிறோம் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+